Friday, December 09, 2005

தோழிக்காக!

படைப்புகள் படிக்கப்பட்டன
படித்தவர்களால் பாராட்டவும்பட்டன
அத்தனை சிறப்புகளையும் பின்தள்ளியது
அன்புத் தோழியின் அங்கீகரிப்பு!

இடைவெளியற்ற வேலைப் பளுவும்
இயந்திரகதியான வாழ்க்கைச் சூழலும்
இடைப்பட்ட காலங்களில்
இடர்ப் படுத்தியது என் எழுத்துலகை!

இன்று நீ வந்தாய்-என்
இதய விளக்கில் எண்ணெய் ஊற்ற
உன் சிரிப்பென்ற தீக்குச்சியால்
என் மனதைப் பற்ற வைத்தாய்!

புதிய அத்தியாயம் துவங்குகிறேன்
பழைய தூசியைத் தட்டிவிட்டு
விருந்தோ மருந்தோ மூணுநாள் என
விடைபெற முடியாமல் திணறவேண்டும் நீ!!!

7 Comments:

At 8:34 AM, Blogger தாணு said...

ஆம். அவளின் கலகல சிரிப்பொலி கேட்டாலே கவலை மறந்து சந்தோஷப் பொறிபறக்கும். ஆனால் என்ன ஒண்ணு, ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொரு நாள்தான் அப்படி சிரிப்பாள்!!

 
At 4:24 PM, Blogger சிங். செயகுமார். said...

உண்மையிலேயே நான் ஆச்சரிய பட்டேன் தானு ஒரு மருத்துவராக இருந்து கொண்டே தமிழ் மணத்துக்கும் நேரம் செலவிட முடிகிறதே என்று, அதற்காகவாவது ஓடோடி வந்து பின்னூட்டாமிட ஆசை.வாழ்க தமிழ்!

 
At 4:45 PM, Blogger b said...

நல்ல கவிதை அய்யா.

 
At 7:08 PM, Blogger தாணு said...

ஜெயக்குமார்,
உண்மையிலேயே தமிழ்மணம்தான் தற்போதைக்கு என் வேலைப்பளுவிற்கிடையில் உள்ள சிறு ஆறுதல்

 
At 10:43 PM, Blogger Unknown said...

நல்ல வரிகள்!!!!
-Dev

 
At 10:24 AM, Blogger erode soms said...

புதுத்தோழி வாழ்க!
எங்களுக்கு புதுப்புதுகவிதை கிடைக்குமே!

நானும் எனது தோழிக்காக வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து "பிளாக்" மூலம் கூற நினைத்திருந்தேன் பலமாதம்

நினைவுகள் விழிக்கையில் காலம்
எனைத்தாண்டிவிட
காத்திக்கிறேன் அவள் அடுத்த
நாளுக்காக...

 
At 8:49 PM, Blogger இரா.ஜெகன் மோகன் said...

தாணு,
நானும் ஒரு தோழிக்காகவேதான் இந்த பதிவை ஏற்படுத்தியிருக்கிறேன்.

 

Post a Comment

<< Home