வாழ்வின் விளிம்பில் முதுமை
முதுமை என்பதொரு மூன்றெழுத்து
முடிவை நெருங்கும் கடையெழுத்து
இறந்த காலங்கள் இன்பமாயிருக்கும்
வருங்காலமோ கேள்விக்குறியாகும்.
வாழ்ந்த காலங்களின் வசந்தங்கள்
விழியோரக் கதைகள் சொல்லும்
வாழும் வாழ்க்கையின் நிச்சயமின்மை
விழியோரங்களில் நீர் வடிக்கும்
தேர்ந்தெடுத்த துணையோ
பெற்றெடுத்த மகவோ
சுற்றி நிற்கும் சுற்றமோ
சொந்தமற்றுப் போகும் நேரம்.
சேர்த்து வைத்த ஐஸ்வரியம்
அர்த்தமற்றுப் போகும் நேரம்
செல்லாக் காசாய் ஒடுங்கி இங்கே
செல்லரிக்கப் போகும் தேகம்
மீண்டு வந்து வாழ வேண்டுமென்று
மெளன யாகம் ஆங்காங்கே
மீண்டு வர வழிதெரியாத
மெளன சாட்சியான உயிர் இங்கே.
போகும் நேரம் தெரிந்துவிட்டதென்று
புன்சிரிப்பால் உணர்த்திவிட்டு
பொங்கியழும் உறவுகளைப் பிரிந்து
பறந்து செல்லும் இன்னுயிர் ஒன்று!
(எல்லா மரணங்களும் ஏற்படுத்தும் பாதிப்பு-
அது எவ்வளவு முதிய வயதாக இருந்தாலும்)
5 Comments:
தாணு,
நல்ல பதிவு.. சோகப்படுத்திட்டீங்க ஒரே நிமிஷத்தில..
ஒரு கணம் முதுமை அடைந்து விட்ட உணர்வு, அருமையான பதிவு. தொடரட்டும்
நல்லா எழுதியிருக்கீங்க தாணு..
"உறக்கமதில் சிறு கனவே வாழ்க்கை
காலம் விழித்துக்கொண்டால்
முடிந்து போகும் வேட்டை!
தேடித்தேடி அலைவதெதை தோழா!
வாழ்வில் நிலையானது எது சொல் தோழா!
தொடக்கமதில் முடியும்
முடிவதிலே தொடங்கும்
அந்தரத்து அரங்கம் இந்தபூமி-உன்
சொந்தமொரு அணுவுமில்லை சாமி!"
உங்க பதிவை இன்றுதான் பார்த்தேன்,
என்பதிவின் சிறுபகுதியை பின்னூட்டமாக்கிவிட்டேன்.
நன்றி ராமநாதன், இளா, ரம்யா& சித்தன்
சு.ரா. மரணப் படுக்கையில் இருந்தபோது அவர் மகள் எழுதிய கடிதம் வாசிக்க கிடைத்தது. அதனால் எழுந்த என் பெற்றோரின் மரண நிமிடங்களின் நினைவே இந்த பதிவு.
Post a Comment
<< Home