பதிவுகள் வீணாகலாமா?
படித்துவிட்டுக் கிழிக்க
பத்திரிகையும் அல்ல
பார்த்தவுடன் மறக்க
திரைப்படமும் அல்ல.
படித்த பிறகும்
பலமுறை திரும்பத் திரும்ப படித்து
பின்னூட்டங்களில்
பதில்களை அலசும் சுவையான பதிவுகள்.
முகம் காட்டாவிடினும்- ஓரளவு
முகவரிசொல்லும் உறவுகள் இங்குண்டு
முகவரி அற்றவர்களைத் தாக்கும்
முயற்சியாகவும் பதிவுகள் இங்கு கண்டேன்.
எழுதுவது
அவரவர் சொந்த விருப்பம்
வரம்புடன் எழுதுவது
மற்றவர்கள் மனதில் உயர்ந்து நிற்கும்.
சர்ச்சைகளும் சண்டைகளும்
இங்கும் வேண்டும்-அது
உறவுகளைப் பலப் படுத்தவே அன்றி
நட்புகளை நலியச் செய்ய அல்ல.
4 Comments:
This comment has been removed by a blog administrator.
பொறுமையும் ஆழ்ந்த அகன்ற சிந்தனையும் மனதில் கொணர்ந்தால்
அமைதி மலர் பூத்திருக்கும்
வலைத்தோட்டம் மட்டுமல்ல
வைய்யகமே செழுமையுரும்..
nanraga ezhuthi irukireergal :)
நல்லாருக்கு தாணு,
சமாதான பதிவு போட்டாலும் 0/6 குத்து குத்துன்னு குத்திட்டாங்களே.. :(
Post a Comment
<< Home