Sunday, September 11, 2005

நண்பர்கள்

நட்பென்ற தேரில்
நாளெல்லாம் பவனி வந்தேன்
நண்பர்கள் மூலமே
நல்லவைபல நான் கற்றேன்.

இடையில் கொஞ்சம் கண்ணயர்ந்தேன்
இல்லற வாழ்வில் குடிபுகுந்தேன்
பாசமழையில் நனைந்தாலும்
பகிர்ந்து கொண்ட நட்புகள் இழந்தேன்
(தற்காலிகமாக)

கடமைகள் அரங்கேற்றிவிட்டு
அக்கடா என்று அமரும்போதுதான்
அடடா இழந்துவிட்டேனோ-என்
அருமை நண்பர்களை என பதைத்தேன்

ஆயிரம் மைலோ அன்றாட வாழ்க்கைச் சூழலோ
அழித்துவிடவில்லை எங்கள் நட்பின் பசுமையை
புரிந்துகொண்டேன் புரிதலின் சுகம்
அறிந்துகொண்டேன் நட்பின் ஆழம்!

2 Comments:

At 2:48 AM, Blogger தெருத்தொண்டன் said...

//ஆயிரம் மைலோ அன்றாட வாழ்க்கைச் சூழலோ
அழித்துவிடவில்லை எங்கள் நட்பின் பசுமையை//

உங்களுக்கு நல்ல நண்பர்கள் போலும்! அது சரி, உங்களை மாதிரி தானே அவர்களும் இருப்பார்கள்..

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஜெயலலிதாவும் ராமதாசும் பேசிக் கொள்ளும் காட்சி:

ஜெ: நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்
ராமதாஸ்: ஆனால் வாய்தான் காது வரை நீள்கிறது

இதைப் போல் உங்கள் நண்பர்கள் நல்லவர்களாகவும் உங்களிடம் பதில் பேசாதவர்களாகவும் இருப்பார்கள் போலிருக்கிறது..

 
At 2:59 AM, Blogger தாணு said...

உண்மைதான். எப்பொழுதுமே அதிகம் பேசும் வாயாடி நாந்தான். என் நண்பர்களின் மெளனமே ஆயிரம் அதிசயங்கள் சொல்லும்!!

 

Post a Comment

<< Home