மங்கையராய்ப் பிறப்பதற்கே...
பிறந்த பொழுதிலேயே
பிறர்க்கெனவே நேர்ந்துவிடப்பட்டவள்.
பருவங்கள் மாறும்போது
பணிசெய்யும் இல்லங்கள்தான் மாறும்.
இளமையில் தாய் வீடு
இடையினில் புகுந்தவீடு
முதுமையில் மகன் வீடு
முடியாதபோது முதியோர் வீடு(விடுதி)
பாசம் தரும் பெற்றவர்கள்
இதயம் நுழைந்து பார்ப்பதில்லை
சொந்தம் கொள்ளும் துணைவர்கள்
சுதந்திரத்தைத் தருவதில்லை.
சிறகில்லாப் பறவைகளாய்
சிரிக்க மறந்த பதுமைகளாய்
மழலை தரும் மேன்மையராய்
மகிழ்ச்சி தரும் மனைவியராய்
கானல் நீரான வாழ்வில்
கற்பூரமாகிப் போனவர்கள்
............பெண்கள்...............
5 Comments:
நன்றாக உள்ளது. உண்மை
பொங்கி வரும் கவிதை நன்றாக இருக்கிறது.
அருமையான வரிகள்.. பாராட்டினாலும் இந்த வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் சோகம் மனதை பிழிகிறது.
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
பெண்மை பற்றி எழுத விழைந்தது தேன்துளியின் பதிப்பு பார்த்த கணத்தில்தான்.
நெல்லை நிலவுகள் எப்போதுமே கவிக்குயில்கள்தான். நன்றி ர.ஞா.
சூரியச்சிறையில்
பூபாளம் பாடவந்த
சின்னப்புறாவே !
உண்மை கசக்கிறது
உள்ளம் வலிக்கிறது
Post a Comment
<< Home