Wednesday, August 31, 2005

பாண்டவர்களைத் தண்டியுங்கள்

தேன்துளியில் தோழிக்கு எழுதப்பட்ட கடிதம் மனதை மிகவும்
வருத்திவிட்டது. பெண்களைச் செயலிழக்கச் செய்யவும் அவர்கள்
முன்னேற முயலும்போது காலைப் பிடித்திழுப்பதாகவுமே நிறைய
பாலியல் வன்முறைகள் அரங்கேறுகின்றன. அது வரம்புமீறி உயிர்களை காவுவாங்கும் அளவு போவது எதனால்?

சிறுவயதிலிருந்தே பெண்மையைப் போற்றுவதாக மாய்மாலம் காட்டி கட்டுப்பாடு என்ற தங்க கூண்டில் சிறையிட்டு விடுகிறோம். அதிலிருந்து விரும்பி வெளிவந்தால் வேலி தாண்டிய வெள்ளாடாக சித்தரிக்கப்படுவோம் அல்லது சமுதாய ஒழுக்கத்தையே கெடுத்த கோடாரிக் காம்பாக்கப்படுவோம்.

பாலியல் வன்மைகளை ஒரு ரோட்டோர விபத்தாக நினைத்து
புகார் பதிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கும் இயல்பு நிலைமை பெண்களுக்கு வரவேண்டும். அந்த நிலைமை வரும்போதுதான் கற்பு பற்றிய அனாவசிய சீண்டுதல், மனவிகாரங்கள் தவிர்க்கப்பட்டு இத்தகைய இழப்புகள் குறையும்.
கண்ணகியும் சீதையும் மேற்கோள்களாக காட்டப்ப்படுவதைத் தவிர்த்து காட்சிப்பொருட்கள் ஆக்கப்படவேண்டும். பாஞ்சாலியைப்
பாவியாக்கிய பாண்டவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டும்.

6 Comments:

At 12:27 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//பாலியல் வன்மைகளை ஒரு ரோட்டோர விபத்தாக நினைத்து புகார் பதிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கும் இயல்பு நிலைமை பெண்களுக்கு வரவேண்டும்.//

உண்மை!

-மதி

p.s.:உங்களுடைய பெயரை, பத்மா அரவிந்தின் சில பதிவுகளில் பார்த்திருக்கிறேன். அந்த 'thanu' நீங்களா?

 
At 1:05 PM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
பாலியல் துன்பங்களை புகார் சொல்லும் தைரியம் பெண்களுக்கு வர முதலில் அவர்களுடைய கணவர்கள் மாறவேண்டும்.

 
At 2:21 PM, Blogger துளசி கோபால் said...

தனு,

புகார் செய்யப் போலிஸ்க்குப் போனா அங்கேயும் பொண்ணூங்களை ஒரு வழி செஞ்சுடறாங்களே. அப்ப எங்கே போய் புகார் செய்யறது?

 
At 7:57 PM, Blogger ஜென்ராம் said...

தாணு,
டாப் கியர் போட்டு வண்டியைத் தூக்கிட்டீங்க..மதி,தேன்துளி,துளசி கோபால் ஆகிய மூன்று முக்கிய வலைப்பதிவர்கள் உங்களுக்கு முதல் மூன்று மறுமொழியிட்டிருக்கிறார்கள்..
வலைப்பதிவில் மேலும் மேலும் முன்னேறுங்கள்..வாழ்த்துக்கள்..

 
At 2:34 AM, Blogger தாணு said...

ஆம் மதி(திருமதி கந்தசாமி அல்லது திரு மதிகந்தசாமி).உங்கள் ஊகம் சரியே. பத்மா அவர்களின் இயல்பு நடை பார்த்துதான் நானும் எழுதலாமென்று ஆரம்பித்தேன்.

உண்மை பத்மா. கணவர்களின் பங்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நிறைய இழப்புகள் சரி செய்யத்தான் படும்.

இப்பொதெல்லம் போலீசைக்கூட பயமுறுத்தும் பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!!!

 
At 11:11 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ம்கூம். ஜசஸ்ட் சந்திரமதி கந்தசாமி.

செல்வின்னு போடலாம். அதைவிட Ms. பிடிச்சிருக்கு. ஆனா எதையும் பெரும்பாலும் பயன்படுத்துறதில்ல.

நிறைய எழுதுங்க தாணு

-மதி

 

Post a Comment

<< Home