Saturday, September 03, 2005

ஜோக்கடிக்கலாமா ஜோக்`கடிக்கலாமா'?

ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது!
சிரிக்க மறந்த சிந்தனைவாதிகளும்
உண்மைச் சம்பவம் பிடிக்காத யதார்த்தவாதிகளும் இதனை வாசித்து வயிற்றுவலி வாங்கிக்கொள்ள வேண்டாம்.......

விபத்து ஒன்றில் மார்பெலும்புக்கூடு சேதமடைந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு அன்பர். மருத்துவரின் கைவண்ணத்தால் திறம்பட செப்பனிடப்பட்டு பின்கவனிப்பு பகுதி(post operative ward)யில் தீவிர கவனிப்பில் இருந்தார். நுரையீரலின் சுவாச சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பலூன்
ஊதி ஊதி உடைக்கும்படி தலைமை மருத்துவர் அறிவுரை கூறியிருந்தார். ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும்.

மறுநாள் காலை உதவிமருத்துவர்கள், ஹவுஸ்சர்ஜன்ஸ், செவிலியர்கள் புடைசூழ தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ்
வந்துகொண்டிருந்தார். வார்டில் நுழைந்ததும் படார் படார் என்றொரு சத்தம். எல்லோர் முகத்திலும் பேயறைந்தது போன்ற
அதிர்ச்சி. திட்டுவதற்கு வாயைத்திறந்த மருத்துவர் அடக்க
முடியாமல் சிரித்துவிட்டார். நம் மார்புக்கூடு நண்பர், மனைவி
பலூன் ஊதி ஊதி தர இருகையாலும் குழந்தைபோல் உடைத்துக் கொண்டிருந்தார், மருத்துவர் பார்த்துப் பாராட்டவேண்டுமென்று!!!!!



9 Comments:

At 4:40 AM, Blogger NambikkaiRAMA said...

ஹா ஹா ஹா! ஆபீசில் எல்லாரும் எனக்கு என்ன ஆச்சுன்னு முறைக்கிறாங்க. அவ்ளோ ச்ச்ச்சிரிப்பு....:))

 
At 5:27 AM, Blogger கலை said...

நல்ல ஜோக்தான்.

 
At 8:02 AM, Blogger பாலதர்ஷன் said...

ஜோக்கிண்ணா இது ஜோக்கு!

 
At 8:04 PM, Blogger ஜென்ராம் said...

இது வேறயா? ம்..கலக்குங்க..

 
At 7:15 AM, Blogger வீ. எம் said...

சூப்பர்

 
At 10:33 AM, Blogger தருமி said...

"ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில்"
- அப்டின்னா பாளையன்கோட்டையோ?
நான் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது ஒரு imported thing ஒன்று கொடுத்தார்களே - ஊதினால் பிளாஸ்டிக் பந்துகள் ஒரு கண்ணாடிக்குள் ஏறி இறங்குமே; அது இல்லை போலும்.

 
At 11:45 PM, Blogger உங்கள் நண்பன்(சரா) said...

very nice, nice joke

 
At 8:34 PM, Blogger அன்பு said...

கலக்கல்...

 
At 11:57 PM, Blogger நிறம் மாறாத உறவுகள் - தொலைக்காட்சி தொடர் said...

நல்ல ஜோக்....வயிறு வலிக்குது.

 

Post a Comment

<< Home