நினைவலைகள் தொடர்ந்து வந்தால்..........
பாலியல் வரம்புமீறல்கள் பெண்களை அதிகம் படுத்தி
வைத்தாலும், அது பற்றிய எதிர்நோக்குகள் எனக்கு
அறிமுகமாகும்போது, ஓரளவு நான் பக்குவப்பட்டுவிட்டேன்.
வாலிப வயதில், மனமுதிர்ச்சியற்ற நாட்களில் அத்தகைய
கஷ்டங்கள் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு எத்தனையோ
காரணங்கள் இருந்தாலும்,இயற்கையாகவே அமைந்த என் தோற்றம்தான் முக்கிய காரணம்..
.
அந்தக்கால சுகாசினிபோல் இருப்பேன் -`கோபுரங்கள் சாய்வதில்லை’சுகாசினி!!! உரசிப் பார்க்கவேண்டும்
என்ற எண்ணம் கூட எங்க ஊர்ப் பசங்களுக்குத்
தோணியிருக்காது. சுற்றி இருந்தவர்கள்
எல்லோருமே நண்பர்கள். அதனால் அங்கே காதலும்
இல்லை, காமமும் இல்லை, எனக்குத் தொல்லையும்
இல்லை.
அழகாக இல்லையே என்று மனதுக்குள் புழுங்கக்கூடத் தெரியாத கிராமத்துவாசம்.. ஆண்கள் யாரும் என்னைவிட அதிக மார்க் எடுத்துவிடக் கூடாது என்பது மட்டுமே அந்நாட்களின் குறிக்கோளாக இருந்தது. சக மாணவி
மருத்துவ தம்பதியரின் மகள் என்பதற்காக மட்டுமே
டாக்டரம்மா என்று கொண்டாடப் பட்டதைப் பார்த்தே
மருத்துவராவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டேன்.
கல்லூரிப் பருவத்திலும் `கடலை’ போடுவதைவிட
கலாட்டா செய்வதிலேயே பொழுது ஓடிவிட்டது.
ஆனாலும் பாலியல் வற்புறுத்துதல்களும், பலாத்காரங்களும் அங்கங்கே பரீட்சை ரிசல்ட்
காரணமாக என்னைச் சுற்றி நடந்த வண்ணமே இருந்தது. இலைமறை காயாக நடந்தாலும் அவ்வப்போது
வெளிவந்துவிடும். சுயமாகப் படித்து முதல் தடவையில்
பாஸ் ஆகும் பெண்கள் எல்லோருமே அப்படி adjust செய்து
கொண்டவர்கள்தான் என்ற கணிப்பு சக மாணவர்களிடம்
இருக்கும். அதிலும் எங்கள் வகுப்பில் பெண்களின் தேர்ச்சியே
அதிகம் இருக்கும். இதில் நான் வேறு ஒரு மாதிரி!!அடிக்கடி சாயங்கால வேளைகளில் காணாமல் போய்விடுவேன்!!! அண்ணன்வீடு நெல்லையிலேயே இருந்ததால் வீட்டு சாப்பாடு தேடி அடிக்கடி சென்றுவிடுவேன். என்தோழிகளும் என்னுடன் வருவார்கள். அதனால் நாங்கள் இரவில் `லாட்ஜ்ஜுக்கு’ப் போய் வருவதாக ஒரு பேச்சு உண்டு. அவதூறுபேசும் Idiots க்கு உண்மை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்ற வீறாப்புக்காகவே ரொம்ப நாள் என் சாயங்கால நகர் உலா
பற்றி மெளனமாக இருந்திருக்கிறேன். என்னவரிடமே போய் `இவள் ஒரு ப்ராஸ்டிட்யூட்’ என்று சான்றிதழ் அளித்த நல்ல இதயங்கள்கூட உண்டு. அந்த வயதில் இத்தகைய வரம்பு மீறிய வார்த்தைகள் செத்துவிட வேண்டும் போன்ற உணர்வைத் தருவதுதான் நடக்கும். ஆனால் என் வளர்ப்பும் தன்னம்பிக்கையும் அவதூறுகளுக்கு அடிபணியாமல் தலை நிமிர்ந்து நடக்க
வைத்தது. இன்றளவும் அது தொடர்கிறது.
மண்பார்த்து நடந்த ஞாபகமே இல்லை, எதிரிலுள்ளவர்கள் கண்
பார்த்து நடந்தே பழகிவிட்டேன்.
9 Comments:
உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
//மண்பார்த்து நடந்த ஞாபகமே இல்லை, எதிரிலுள்ளவர்கள் கண்
பார்த்து நடந்தே பழகிவிட்டேன்.//
நல்ல பதிவு தாணு.
எனக்கொரு மடல் போட முடியுமா?
mathygrps at gmail dot com
நன்றி தாணு.
-மதி
அருமையான பதிவு. விடுங்கள் இந்த வரைமுறை கெட்டவர்களை. பொறாமைப் பிண்டங்கள்.
தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் என்றும் வாழ்வு தரும். உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
(பாளையங்கோட்டையில படிச்சீங்களா? என்னோட நெருங்கிய நண்பர்கள் டவுன்லதான் இருந்தாங்க.)
தாணு,
இன்று நான் வேறு தாணுவைப் பார்க்கிறேன். TNT 3267 என்ற பியட் காரில் வரும் அன்புத் தோழியை இப்போது திடீரென நினைவுபடுத்திவிட்டீர்கள் டாக்டரம்மா என்று. என்னுள்ளில் ஏதோ ஜில் என்றது.(!)
தோற்றம் குறித்த சிந்தனையே - கறுப்பு சிவப்பு என்ற பார்வை சமூகத்தில் நிலவுவதே சென்னை வந்த பிறகு தான் தெரிய வந்தது. அந்த அளவு ஊரில் கள்ளம் கபடம் இல்லாமல் இருந்திருக்கிறோம்
நீங்கள் கிளப்பிய புயலில் நிறைய நினைவுகள் ...
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.நம்மோட
`ஆட்டோகிராப்’ மத்தவங்களுக்கு `போர்’ அடிக்குமோன்ற
தயக்கத்திலேயே எழுதினேன். நினைவுகளை விட அதன்
கருத்து பிடித்துப்போனது கண்டு மிக்க மகிழ்ச்சி. குழந்தைத்தனமாக எழுதிவிட்டேனோ என்று நிஜமாகவே
நேற்று இரவு முழுவதும் குழம்பியிருந்தேன். மிக்க நன்றி.
டாக்டரம்மா பற்றி சொன்னதும் ராம்கிக்கு `ஞாபகம் வருதே’
பின்னணி இசையாகக் கேட்கிறதோ? பள்ளி நினைவுகள் பற்றி
நீங்கள் ஒரு பதிவு போடலாமே?
//மண்பார்த்து நடந்த ஞாபகமே இல்லை, எதிரிலுள்ளவர்கள் கண்
பார்த்து நடந்தே பழகிவிட்டேன்.//
நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செறுக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம் - பாரதி
ஆனந்த விகடனில் 1980 களில் வெளி வந்த வேர்கள் என்ற கதையும் மேல் சொன்ன கவிதையும் என் சக ஊழியர் என் மனைவியாக மாற வழி கோலியது. இன்று என் மகளுக்கும் அந்தக்கவிதை சொல்லியே வளர்க்கிறேன்.
உங்கள் வாழ்க்கை பயணம் இனிதே தொடரட்டும்.
தாணு
மருத்துவ கல்லூரி வாழ்க்கையைப் பற்றியும் எழுதுங்கள்
உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் பெருமைகொள்ள வைக்கிறது, பிரமிப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
Post a Comment
<< Home