பிஞ்சின் முத்தமா?பிஞ்சில் பழுத்த முத்தமா?
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து என் எட்டு வயது மகன் குறுகுறுவென்று அலைந்துகொண்டிருந்தான்.ஏதோ சொல்லத்துடிப்பது புரிபட வாயைக் கிண்டினேன். மடை திறந்து வெள்ளம் பாய்ந்தது (ஓட்டைப் பல் gap வழியாக).அவன் வகுப்பு குறும்புக்கார `மொஹ’ (முகமது) பண்ணிய `சேட்டை’ பற்றி!
டெஸ்க்கில் கைநீட்டிப் படுத்திருந்த வகுப்புத் தோழியின் கையில் சட்டென்று முத்தம் கொடுத்திட்டானாம். சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தான், நான் என்ன சொல்லுவேனென்று?
`அப்படியா? அப்புறம்’ன்னு நான் சாதாரணமாகக் கேட்டதில் அவனுக்கு ரொம்ப வருத்தம். எனக்கு சரியாகப் புரியவில்லை என்று யோசித்துக் கொண்டான் போலும். `அடுத்தாலே என்ன பண்ணினான் தெரியுமா?’ன்னு கேட்டுட்டு எனக்கு ரொம்ப நெருக்கமா வந்து `ஐ லவ் யூ சொல்லீட்டான்’ன்னு கிசுகிசுப்பா சொன்னான். இதுக்கு மேல அவனை கன்வின்ஸ் பண்ணாட்டி தப்புண்ணு அவனை விவாதத்துக்கு இழுத்தேன். லவ்னா என்ன, ஒருத்தரை ஒருத்தர் நேசிப்பதுதானேன்னு சில பல உதாரணங்களுடன் விளக்கினேன். அதனால் அந்த பையன் செய்ததைத் தப்பா நினைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தேன். `நீங்க சொல்றது வேற லவ் மம்மி, இது கல்யாணம் பண்ணிக்கிற லவ்’ ன்னு ஒரு விளக்கம் கொடுத்தான் பாருங்க அசந்து போயிட்டேன்! அதுக்கு பிறகு அவனுடன் பேசி கவனத்தை கொஞ்சம் மாற்றினாலும், அவன் புரிந்து கொண்ட விதத்தை மாற்ற முடிந்ததா என்று இன்னும் சொல்லமுடியவில்லை!
4 Comments:
எனக்கும் ஏறக்குறைய இதே அனுபவம் கிடைத்திருக்கிறது. இன்னமும் சரியாகச் செய்தேனா என்று தெரியவில்லை.
என்னுடைய கஸின் ஊருக்குப் ஐந்து மாதங்களாக ஊரில் இல்லை. அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, பார்த்துக்கொள்ள போனாங்க. எங்கிட்ட வாரக்கடைசில வந்து பசங்களைப் பார்த்துக்கோன்னாங்க.
ஒரு நாளு, நம்மாளு ஆறு-ஏழு வயது அவருக்கு. ஸ்பாஞ்ச் பாப் படத்தில வந்த ஒரு வசனத்தை வச்சு பெரிய அலப்பறை பண்ணிட்டு இருந்தாரு. இன்னொரு வசனம், விளையாட்டா உள்ளாடையைப் பத்தினது. முதலாவது இந்த ஐ லவ்யூ மாட்டர்தான். இதுல என்ன இருக்குன்னா, ஐலவ்யூ சொல்லக்கூடாதாம். ஏன், யாரு சொன்னாங்க என்ன ஏதுன்னு நோண்டிக்கிட்டே அவனைப்பார்த்து ஐலவ்யூ'ன்னேன். என்ன செய்யுறதுன்னு தெரியலை அவனுக்கு. முகமெல்லாம் வெக்கம். நீங்க சொல்லக்கூடாதுனான். ஏன், என்னத்துக்கு. நான் யாரு? அன்ரிதானே. நீ என்னோட நெஃப்யூ. எனக்கு உன்னைப் பிடிக்கும். லவ்யூ சொல்லலாமா'னு சொல்லி; அவனோட 12 வயசு அக்காவையும் என்ன நினைக்கிறன்னு இழுத்துவிட்டு ஒரு மாதிரிப் போச்சு. சங்கோஜமா இருக்கான்னு, இப்பவும் சமயம் கிடைக்கிறப்பல்லாம் ஐலவ்யூ'ன்னு சொல்றேன். சில சமயம், பெரியவங்கதான் பசங்களைக் கெடுக்கிறாங்க. ஒரு உறவினர், ஐய்யே'ன்னு சொல்லி பீஸ்பீஸ்ஸாக்கிட்டேன். :P
இன்னும் இத மாதிரிக் கொஞ்ச விதயம் இருக்கு..
சும்மா பகிர்ந்துக்கணும்போல இருந்துச்சு. அதான்.
-மதி
ரொம்ப நாளா சத்தமே இல்லையே? பிசியா? குழந்தைகள் மனசு இனிய தென்றல் மாதிரி, நாம்தான் சந்தர்ப்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரே விசயத்துக்கு பல முகங்கள் காட்டி அவங்களைக் குழப்பிடறோம்! என் மெயில் கிடைத்ததா? பதில் எதிர்பார்க்கிறேன்.
படிச்சுட்டு அழிச்சுருங்க...
மடல் போட்டுட்டேன் தாணு. கொஞ்சம் பாருங்க. எதுக்கும் திருப்பி அனுப்புறேன்.
இன்னொருத்தரும் மடல் வரலைன்னு சொன்னாங்க. ஜிமெயில்ல பிரச்சனையா தெரியலை.
ஸாரி. படிச்சுட்டு அழிச்சிருங்க. சரியா?
-மதி
நண்பர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒரு சீன் பிடிச்சுக் கொடுத்திருக்கீங்க தாணு..
அதை இன்னும் நல்ல சுவாரஸ்யமா நீட்டியிருக்காங்க மதி.
உங்க ஊர் பக்கம் (பையன்களின் பெயர்)இதனாலேயே பிரச்னை வருமே..அதெல்லாம் இப்போ நின்னுடுச்சா?
உங்க பையனுக்கு என்னோட ஐ லவ் யூ சொல்லுங்க..
Post a Comment
<< Home