பத்திரிக்கைகள்
எங்க ஊரில் வெளிவரும் குறிப்பிட்ட பத்திரிக்கையின் விளம்பரப் பகுதி ஒரு வித்தியாசமான ஒண்ணு. தினசரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதோ இல்லையோ, இரங்கல் செய்திகள் Highlighted-ஆக இருக்கும். பக்கத்து தெரு இரங்கல் கூட பத்திரிக்கை பார்த்துதான் அனேக நேரங்களில் தெரிய வரும். மிக நெருங்கியவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறிவிக்கும் விதமாக அறிவிப்பாக வருவது நல்லதுதான். ஆனால் மிக முக்கிய புள்ளிகள் இறப்புக்கு `வருந்துகிறோம்’ சொல்பவர்கள், சில நேரங்களில் பெருவாரியான பக்கங்களை ஆக்ரமித்துக் கொள்வதால், அத்தியாவசியமான செய்திகள் கூட ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடப்படும்!
காலையில் எழுந்ததும் எந்த வீட்டு இரங்கலுக்கு செல்ல வேண்டுமென்று plan பண்ணுவது வேதனை கலந்த routineதான். இதில் இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், வாழ்த்துகிறோமும் வருந்துகிறோமும் அடுத்தடுத்து பிரசுரிக்கப் படுவதுதான். வயசு ரொம்ப கொஞ்சமாக இருக்கே, என்ன காரணத்தால் இறந்திருப்பாரோ என்று கவலையுடன் பார்த்தால், வெளிநாடு போக வாழ்த்துகிறோம் என்றிருக்கும். தப்பர்த்தம் பண்ணிக்கொண்டதுக்காக குற்ற உணர்ச்சியுடன் அடுத்த பக்கத்துக்குத் தாவுவோம். மணநாள் வாழ்த்தும், மரண வருத்தமும் கூட இதேபோல்தான் பிரசுரிக்கப்படும்.
மற்ற அறிவுப்புகளெல்லாம் ஒரே பக்கத்தில் வந்தாலும் இரங்கலுக்கு மட்டும் தனிபக்கமோ, குறிப்பிட்ட இடமோ கொடுக்கலாமே! இது எங்க ஊரில் மட்டும் நடப்பதா இல்லை மற்ற ஊர்களிலும் உண்டா என்று தெரியவில்லை. தெருத்தொண்டன் போன்ற பத்திரிக்கைக்காரர்கள் இதைத் திருத்த சொல்லலாமே!
14 Comments:
//வாழ்த்துகிறோமும் வருந்துகிறோமும் அடுத்தடுத்து பிரசுரிக்கப் படுவதுதான//
இதில ஒரு விஷயமிருக்குங்க. வாழ்த்துகிறோம் பகுதிக்கு பாதி பேர் தானாகவே விளம்பரம் கொடுப்பதில்லை. சிலர் கட்சியின் கட்டாயம், சிலர் முதலாளி விசுவாசம், சிலர் வேறு "காரியங்களுக்காக" கொடுப்பார்கள். அப்படி இஷ்டமில்லாமல் கொடுக்கும் பொழுது "வாழ்த்துகிறோம்"கள் "வருந்துகிறோம்"களுக்குப் பக்கத்தில் வருவதுண்டு....
romba correct.
Itha naanum romba naal munnadi yosichurukken.
கணேஷ் அடிக்கடி வருந்திக்கொண்டே வாழ்த்தியிருப்பார் போல! வார்த்தைகளில் ஒரு சோகம் தெரியுதே!
பத்திரி*க்*கை - தவறு
பத்திரிகை என்பதே சரி
என்றும் அன்பகலா
மரவண்டு
அத விடுங்கங்க ...
அப்படிப்போட்ட "வாழ்த்துகிறோம்"ல சோகம் இருக்கத்தான செய்யும்.
போஸ்ட்மார்ட்டம்(பிற சவம் என்று எழுத மனம் இல்லை) முடித்துவிட்டு பிரசவம் பார்க்கச் செல்லும் பழக்கத்தை தனி ஒரு மருத்துவரால் போக்க முடியுமா?
அவர்களுக்கு அதுவும் விளம்பரம், இதுவும் விளம்பரம் அவ்வளவுதான் போலிருக்கிறது.
எந்தவித ethicsஉம் இல்லாமல் தான் பத்திரிகைகள் உள்ளிட்ட பல வியாபாரங்கள் நடந்து வருகின்றன.
பள்ளிக்கூட வாத்தியாரை விட்டுவிட்டு மழைக்கு ஒதுங்கியவனை பள்ளிக்குப் பொறுப்பாக்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
எந்தத் துறையிலும் உரிமையாளருக்கும் உழைப்பவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விளம்பரங்களில் மரண அறிவித்தலுக்கு என்று தனியாக இடம் ஒதுக்குதல் நல்லது. அப்படிப் பல நாளிதழ்கள் செயல்படுகின்றன. ஒரே நாளிதழில் கூட பதிப்புகளுக்கு இடையே வேறுபாடு இருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த விளம்பரம் முதல்பக்கத்தில் அல்லது இந்தப் பக்கத்தில் பிரதானமாக இடம் பெற வேண்டும் என்று கூறி பணம் செலுத்துபவர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அட! அந்தக் காலத்துல இருந்தே அந்த மலருக்கு 'எழவுப் பத்திரிக்கை'னு ஒரு பேரு இருக்கே உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் நீங்க சொல்றது சரிதான். கொஞ்சம் யோசிச்சாங்கன்னா செய்யறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.
செல்வராஜ் சொன்ன பேர் கூட நல்லாத்தான் இருக்கு.
தெருத்தொண்டனைப் பொறுப்பாளியாக்கவில்லை, பரிந்துரைக்கத்தான் சொன்னேன். தனி மனித முயற்சிகள் தேவையான மாறுதலைக் கொண்டுவராவிட்டாலும், சில சலனங்களையாவது ஏற்படுத்தும் அல்லவா?
`பத்திரிகை'தான் சரியா?
சீக்கிரம் படித்து முடித்து மடித்து விடும் வசதிக்காகத்தான் ...
தானு,
வாழ்க்கை என்பது இன்பம் , துன்பம், வாழ்த்து ,வருத்தம் எல்லாம் கலந்து அடுத்தடுத்து வருவது ..அப்படினு உணர்த்த அந்த மாதிரி போடுறாங்கப்பா.. கொஞ்ச நேரத்துல நம்ம நம்ம பத்திரிகை பற்றி இப்படி சொல்லிட்டீங்களே .. அங்க நல்ல மனசு புரியாம..
அப்புறம் பின்ன, நல்ல செய்தி கொடுக்கறாங்களோ இல்லையோ 6 ரூ க்கு பத்திரிகையும் கொடுத்து ..சோப்பு, மஞ்சபொடி, ஊறுகாய், ஷாம்பு னு ஏதாச்சும் ஒரு ஐயிட்டம் கொடுக்கறாங்களே.. அவங்களை சப்போர்ட் பண்ணாம இருக்க முடியுமா.. :)
சப்போர்ட் பண்றமோ இல்லையோ, புலம்பிக்கிட்டாவது படிச்சுத்தான் ஆகணும். இல்லாட்டி ஊர் நடப்பும் தெரியாதில்லே!
"எங்க ஊரில்...." - அப்டின்னா..?
தானு! அவர்களே தாங்கள் கேள்வி எழுப்பிய கனவு என் வலைப்பூவில் பற்றி பதிந்துள்ளேன். படித்தீர்களா?
//"எங்க ஊரில்...." - அப்டின்னா..? //
ஈரோடு, திருப்பூர் பக்கந்தேய்....
Post a Comment
<< Home