எதனைக் கண்டான்.................மதங்களைப் படைத்தான்
மதத்தை மதிப்பவர்கள் ஏன்
மனிதர்களை மதிக்க மறுக்கிறார்கள்?
கடவுளுக்கு வக்காலாத்து வாங்குபவர்கள் ஏன்
கலவரங்களுக்கு சமாதிகட்ட முயலுவதில்லை?
மதம் என்ற மதம்பிடித்து ஒரு கூட்டம்
கடவுளைக் கட்சிக்கொடிசுற்றி காட்டும்!
மனம் வருத்தும் பின்னூட்டம்பல இட்டும்
வருந்தி வம்புக்கிழுக்கும் `நட்பு’ வட்டம்!
இடையில் கருத்துசொல்லப் புகுந்தாலோ
இடையிடையே எட்டிப் பார்த்தாலோ
இதுவரை என்ணியிருந்த கருத்தும் குழம்பி
இனிமேல் எதுசரியென்ற தெளிவும் இன்றி
மோட்டுவளையையும் மொட்டைமாடியையும்
வெறித்துப் பார்க்கும் `சேது’விக்ரம் ஆக்கிவிடும்!
வலைப்பூக்களிலும் கள்ளிகள் பூப்பதேனோ
விடைதேடி விழிகள் காத்திருக்கின்றனவே!
6 Comments:
பாராட்டுகள் நண்பரே!
அருமையாக சொன்னீங்க.
அனைவரும் சொல்கிறோம், கடவுள் அளப்பறியாத அளவிற்கு சக்தி படைத்தவர், அவரால் முடியாதது எதுவும் இல்லையாம்.
ஆனால் பல மடையர்கள் சொல்கிறார்கள், அத்தகைய சக்திகள் படைத்த கடவுளுக்கு உதவுகிறார்களாம், இவர்களால் தான் கடவுளின் புகழ் பரவுதாம், இவர்கள் தான் மதங்களை வளர்க்கிறார்களாம். அவர்கள் நம்பும் கடவுளை, மதத்தை, நம்பாத மற்ற மதத்தவர்களை (அவர்களும் அதே கடவுளாலேயே படைக்கப்பட்டவர்கள் என்பதை ஒத்துக் கொள்வார்கள்) கொன்றும், இழிவுப்படுத்தியும் வருகிறார்கள்.
இவர்களை கண்டிப்பாக கடவுள் மன்னிக்கவே மாட்டார்.
போலித்தனங்களை கண்டுகண்டு
மனம் வெதும்பும் ஆதங்கம் நன்கு புலனாகிறது.
மதங்களும் சாதியும் மொழியும் மக்களுக்கு
செய்தது தீமையே அதிகம்.தன் இனம் தன்
இரத்தம் எங்கும் இருக்க வேண்டுமென்ற
மடத்தனமான வெறியே இதன் காரணம்.
போலிகளை தோலுரிக்கும் சித்தர் பாடலை
எனது பதிவில் பாருங்கள்...
ரொம்ப வேதனைப் பட்டுட்டீங்களோ.
விடுங்க முகத்துக்கு நேரேயே நிறைய நடக்குது. முகம் தெரியாத இடத்தில் நடப்பது இயற்கை தானே.
nallathoru pathivu, pArAttikkaL !
மதங்களையும், கடவுளர்களையும் படைத்தவர்கள் என்னவோ ரொம்பவே புத்திசாலிகள்தான்.........
கவிதையின் கரு தோன்றியதே தருமியின் பதிவு பார்த்துத்தான்.
Post a Comment
<< Home