Saturday, September 17, 2005

குடிமகனே!.....பெரும்குடிமகனே!!

தண்ணீரில் தத்தளித்து
தரைமேலே தள்ளாடி
தனக்குள்ளே தடுமாறி
தவிக்கிற மனசு!

ஒரு குடிமகனின்
ஒரு இரவுக் கதை!

தடியால் அடிவாங்கினாலும்
தாங்கிப்பிடித்து தூங்கவைத்து
வாந்தி எடுத்தாலும் கையில்வாங்கி
பக்குவப்பட்ட மனசு!

குடிமகன்களின் மனைவியரின்
அன்றாட இரவுக் கதை!

3 Comments:

At 12:08 PM, Blogger Unknown said...

கேட்டுப் பெறுவது சுதந்திரமல்ல., அது பிச்சை!!. கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது., எடுத்துக் கொள்ள அறிவுருத்தப் பட வேண்டும். மகளிர் குழுக்கள் ஒவ்வொரு குக்கிராமத்திலும் வர வேண்டும். பொருளாதாரத்தில்., தானே தன் காலில் நிற்கவும். உழைத்த பணத்தை ஊதாரிகளிடம் கொடுத்துவிட்டு உதை வாங்கிக் கொண்டிராமல்., தான் உழைத்த பணத்தை தானே பயன்படுத்த வேண்டும் (இதை இங்கு அமெரிக்காவில் பணம் ஈட்டும் சகோதரிக்ளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்). தன் குடும்பத்திற்கு ஒன்றை செய்ய வேண்டுமென்றால்கூட, அதை குற்றவுணர்வுடன் செய்யும் சகோதரிகளை இங்கு பார்க்கிறேன். பெண் என்பாதல் எந்தக் கல்லூரியிலாவது கட்டணத்தில் சலுகைகள் தருகிறார்களா என்ன?. தன் வீட்டில் தனக்கு உழைப்பான் என்ற நம்பிக்கையுடன் சுயநலம் கலந்து படிக்க வைக்கப்படும் ஆண் மகனைக் காட்டிலும், எங்கு சென்றாலும் தன் மகள் கல்வியில் குறைவிருக்கக் கூடாது என உண்மையான அக்கரையில் படிக்க வைக்கப் படும் பெண்ணிற்கே அதிக நன்றியுணர்ச்சியும், பாசமும் இருக்க வேண்டும். விவசாயிக்கு உழைக்கும் உழவு மாடுகளைப் போலவே நாமும். இதில் ஒரு நகைமுரண்., நாம் வாங்கிய ஒருவனுக்கு உழைக்கிறோம் (பெண்களை மதிக்கும் உண்மையான ஆண்களை இதில் சேர்க்கவில்லை). மாட்டிற்காவது வருசத்துல ஒருநாள் நன்றி சொல்றாய்ங்க!. (எனக்குப் பொங்கல் வச்சுறாதிங்க அப்பு!!!). உரிமைகளைப் பிச்சையிட ஒருவரையும் அனுமதிக்காதீர்கள் குறைந்த பட்சம் படித்த பெண்களேனும்.

தாணு!, இது உங்கள் அடுத்த பதிவிற்கு எழுதிய பின்னூட்டம். ஆனால் அங்கு இடமுடியவில்ல. சரிபாருங்கள். ஆனால், அட! பின்னூட்டம் இக்கவிதைக்கும் பொருந்துகிறதே?.

 
At 7:39 PM, Blogger erode soms said...

இன்று முழுக்க வாந்தி நோயாளிகளா?

 
At 8:03 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அப்படிப்போடு!,

கலக்கிட்டீங்க அம்மணீ! எங்க உங்கள ரொம்ப நாளாக்காணோம்???

-----------

தாணு - நான் அடுத்த பதிவைப்படிக்கப்போய்க்கொண்டே இருக்கிறேன்.

-மதி

 

Post a Comment

<< Home