Sunday, September 18, 2005

பாவப்பட்டஜென்மங்கள்-2

சமீபத்தில் ஒரு தொடர்கல்வி நிகழ்ச்சிக்காக என்னை அழைக்க வந்தவர் கொடுத்த புள்ளிவிபரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

எய்ட்ஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் விகிதாச்சாரம்:
குடும்பப் பெண்கள்- 22%
ப்ரொபஷனல் - 10%
பாராமெடிகல் - 17%
........ - x
......... - x
commercial sexual workers - 2%

மற்ற புள்ளிவிபரங்கள் நான் சொல்ல வந்த கருத்துக்கு முக்கியமல்ல, எனவே அவ்வளவையும் எழுதவில்லை.

மேற்கூறிய புள்ளி விபரங்களைப் பார்த்தால் பளிச்சென கண்ணில் படுவது என்ன? எய்ட்ஸ் தாக்குதல் குடும்பப் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் இவையெல்லாம் பெரும்பாலும் தற்செயலாகவே, முதல் பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அது மேல்மட்டத்தை சேர்ந்த படித்த குடும்ப பெண்களையும் விட்டு வைப்பதில்லை.
பையன் என்ன படித்திருக்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றெல்லாம் விசாரித்து ஏகப்பட்ட பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணும் பெற்றோர்க்கு இந்த விஷயத்தை அறிந்து சொல்ல மட்டும் எந்த வழியுமே இல்லையே! ஜாதகப் பரிவர்த்தனைகள் பார்க்கும் போது இருபாலாருக்குமே இந்த பரிசோதனையும் பார்க்க முடிந்தால் எத்தனை இழப்புகளைத் தடுக்க முடியும். ஆனால் சாத்தியப்படாத ஒன்று.

கமர்சியல் செக்ஸுவல் வொர்க்கர்ஸுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மறுபடி மறுபடி புகட்டப்படுவதால், அதற்குத் தேவையான பாதுகாப்பு முறைகளைக் கடைப் பிடித்து விடுகிறார்கள். ஆனால் நம் குழந்தைகள் எத்தனை பேருக்கு செக்ஸ் குறித்த சரியான அறிவும், எய்ட்ஸ் பற்றிய கல்வியும் போதிக்கப் படுகிறது? பாலியல் கல்வியை கட்டாயப் பாடமாக்குவது எத்தனை அறியாமைகளைப் போக்கும்! ஒரு தாயோ தந்தையோ சொல்லித் தருவதை விட ஆசிரியர்கள் மூலம் கிடைக்கும் அறிவுத்திறன் நிச்சயமாக சிறந்ததே!

அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன?
பாசிடிவ் என்று கண்டுகொள்ளப் பட்டதும், ஒன்று டாக்டரை மாற்றிக் கொள்வார்கள், அல்லது ஊரை மாற்றிக் கொள்வார்கள், அதுவும் இல்லையெனில் கணவர் காணாமல் போய்விடுவார். கடைசியாக இந்த பரிசோதனை வசதிகளே கிராம தாதியரிடம் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். வருங்கால சந்ததியின் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு தங்கள் வாழ்க்கையும் கேள்விகுறியாகி நிற்கிறார்கள்!!!!?

14 Comments:

At 11:00 AM, Blogger Thangamani said...

நல்ல பதிவு! தகவலுக்கு நன்றி!

 
At 4:43 PM, Blogger துளசி கோபால் said...

தாணு ரெண்டுநாளா உங்க பின்னூட்டப்பெட்டி உள்ளெவிடலையேப்பா(-:

குடும்பப்பெண்களுக்கு வர்றதுக்குக் காரணம் புருசன் மேலே இருக்குற அதீத நம்பிக்கை.

அருமையான பதிவு. ஆழமா சிந்திக்க வேண்டியதும்கூட.

 
At 7:08 PM, Blogger Ramya Nageswaran said...

எப்படி பார்த்தாலும் அப்பாவிப் பெண்கள் தான் கஷ்டப்படுகிறார்கள். Depressing புள்ளி விவரங்கள். என்ன செய்வது?

 
At 9:55 PM, Blogger Ganesh Gopalasubramanian said...

பயமூட்டுகிறது நீங்கள் கொடுத்திருக்கும் விகிதாச்சாரம் !!!

 
At 12:32 AM, Blogger Voice on Wings said...

திருமணத்திற்கு முன்பு மணமக்களின் ஜாதகத்தை விட, அவர்களது எய்ட்ஸ் பரிசோதனை ரிப்போர்ட்களை மாற்றிக் கொள்வது மேலும் பொருத்தமானதாகப் படுகிறது.

 
At 3:36 AM, Blogger Dubukku said...

புள்ளிவிபரம் அதிர்ச்சியாயிருக்கிறது. Voice on wings சொன்னதை ஆமோதிக்கிறேன்.

 
At 8:07 PM, Blogger அன்பு said...

மீண்டுமொரு முக்கியமான பதிவு கொடுத்தமைக்கு நன்றி...

At 12:19 PM, டி ராஜ் said...

சில நாடுகளில் உள்ளது போல, நமது நாட்டில் அனைத்து கர்ப்பஸ்தீரிகளுக்கும் AIDS பரிசோதனை வந்தால் நன்றாகத்தான் இருக்கும். நமது நாட்டில் நடக்குமா ?


சிங்கப்பூரிலேயே இந்தமுறை இந்தவருடம்தான் அமலாயிருக்கிறது. அதிலும், தான் பரிசோதனைக்கு உட்படவேண்டாம் என்று விண்ணப்பம் செய்தால் விலக்களிக்கப்படுகிறது.

At 1:02 PM, Voice on Wings said...

திருமணத்திற்கு முன்பு மணமக்களின் ஜாதகத்தை விட, அவர்களது எய்ட்ஸ் பரிசோதனை ரிப்போர்ட்களை மாற்றிக் கொள்வது மேலும் பொருத்தமானதாகப் படுகிறது.


நல்ல ஆலோசனை - நடைமுறைக்கு வருமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்தப்பரிசோதனை இல்லையென்றாலும் கூட RH+ போன்ற அத்தியாவாசிய இரத்தப்பரிசோதனை செய்தால் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம் (அப்படித்தானே டாக்டர்!?)
எங்கள் அத்தை ஒருவர் சொல்லியிருக்கிறார், மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது எப்படியாவது பேசி வரயிருக்கும் மருமகனை HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக. செய்கிறாரோ, செய்யவில்லையோ விழிப்புணர்வு வந்துவிட்டது என்று நான் விழிப்படைந்தேன்:)

 
At 9:19 PM, Blogger Voice on Wings said...

Raj, valid question :) (except for the offending 'he')

My suggestion is taking in view the current mindset that 'pre-marital sex' is not taboo, whereas 'extra-marital sex' still is, and many right-thinking individuals might not indulge in the latter, while having no qualms about the former. In the case of cheating spouses, they let down their partner in many ways. Passing on a killer disease is just one of them.

Of course, there are non-sexual means of contracting the disease (blood transfusions / contamination etc.) and passing it on sexually to the partner. People at risk of contracting it as above (medical professionals), should probably undergo periodic check-ups, as the lives of their loved ones are also at stake along with theirs.

 
At 2:37 AM, Blogger தாணு said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!
சிங்கப்பூரில் இதை அமுல்படுத்தியது குறித்து மகிழ்ச்சி. அதில் எந்த மாதிரியான medico legal பிரச்னைகளை எதிர்நோக்கவெண்டுமென்று யாராவது விளக்கினால் இன்னும் உபயோகமாக இருக்கும்.
ஒரே மாதிரியான நோய்க்கிருமிகள் தாக்கினாலும், பெண்களின் பாதிப்பு அதில் அதிகம்தான். அவர்களின் உடலுறுப்புகளின் அமைப்பு அதிக அளவு நோய்க்கிருமிகளைத் தக்கவைத்துக் கொள்ளும்விதமாக அமைந்துவிட்டது. இப்போது Female condom கூட விற்பனைக்கு வந்துவிட்டது என்று கேள்வி.
நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவப் பணியாளர்களைவிட, கிராமப்புற தாதியரும், பணியாளர்களும் இந்தவிதமான எதிர்நோக்கலுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். போதிய பரிசோதனை வசதியின்மை, தகுந்த பாதுகாப்பு வசதிகளின்மை போன்றவை இவர்களை எப்போதும் அச்சுறுத்தும் நிலையிலேயே வைத்திருக்கிறது.

 
At 4:25 AM, Blogger அன்பு said...

நீங்கள் கேட்ட, கருத்தரித்த பெண்களுக்குண்டான எய்ட்ஸ் சோதனை பற்றிய மேல் விபரம் தேட முயல...

கடந்தவருட இறுதியில் அந்த சட்டம் அமுல்படுத்திய கையோடு,
கடந்தவருடமே 'திருமணம் செய்ய உள்ள தம்பதிகளுக்கான கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை' அமுல்படுத்துவது தொடர்பான சுகாதார அமைச்சின் அறிக்கை கிடைத்தது

சுகாதர அமைச்சரின் கருத்து...

இங்கு கருத்தறியும் குழு ஏற்கனவே இந்த கருத்துக்கணிப்பை முடித்துவிட்டதால் இப்போது அமுல்படுத்தப்பட்டுவிட்டதா இல்லையா என்று சரியாக ஞாபகமில்லை, மேலும் தேடி சொல்கிறேன்.

மேலும், மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் 'திருமணம் செய்ய உள்ள தம்பதிகளுக்கான கட்டாய எய்ட்ஸ் பரிசோதனை' ஏற்கனவே (முஸ்லிம்களுக்கு மட்டும்) அமுலில் உள்ளது, மற்ற மாநிலங்களும் விரிவாக்கம் செய்ய இருக்கிறது.
மேல் விபரத்துக்கு...

 
At 7:21 AM, Blogger தாணு said...

அன்பு,
தகவலுக்கு நன்றி. இன்றுதான் முழுவதும் வாசிக்க முடிந்தது.டெஸ்ட் எடுப்பதிலுள்ள பிரச்னையின் மறுபக்கமும் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் ஓரளவு நன்மைகள் கிடைக்குமென்பதை மறுக்க முடியாதில்லையா?

 
At 10:50 AM, Blogger Santhosh said...

You are just like that blaming that males are primary cause of AIDS and these kinds of diseases. Earlier there were some wrong advertaisement like lorry drivers were reasons for the AIDS.
Now a days you know in call centers they are having condomn vending machine. In most of the cases males and females are equally responsible for these kinds of diseases. Do you know many people in high class society think that AIDS will infect poor people only.
Try to get the statistics of pre marriage sex and the no.of women having sex with males other than husband. Stop blaming males.

 
At 11:58 AM, Blogger தாணு said...

சந்தோஷ் என் பதிவை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இருபாலாருக்கும்தான் டெஸ்ட் பண்ணவேண்டுமென்று பரிந்துரைத்தேன். அதேபோல், தவறு யாருடையதாக இருந்தாலும் பாதிப்பு பெண்களுக்கு அதிகம் இருப்பது அவர்கள் உடற்கூற்றினால் என்றும்தான் சொல்லியுள்ளேன்.
அதே மாதிரி , லாரி ட்ரைவர்கள்தான் எய்ட்ஸூக்கு காரணமென்று சொல்லப்படவில்லை, அதிகமாக பரப்பப்பட்டது அவர்களால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது.
ஆண்டாண்டுகாலமாக extramarital& premarital sex சமுதாயத்தில் புறையோடிப்போய்த்தான் இருக்கிறது. அது சமூகம் சார்ந்த நிகழ்வு. அந்த மாதிரி இருப்பவர்களிடையே வியாதி அதிகப்படியாகத் தென்படுவதில்லை. அவர்களுக்கு அதன்மூலம் வரும் வியாதிகள் பற்றிய உணர்வும் இருப்பதால் தக்க பாதுகாப்புகளைச் செய்து கொள்கிறார்கள். நான் சொல்ல வந்தது திருமணபந்தத்தின் மூலமே ஏற்படும் பாதிப்புகளைப் பற்றித்தான். கல்யாணத்துக்குமுன்பு பரிசோதனை செய்துகொண்டாலும், அதன்பிறகு வராது என்பதற்கு உத்தரவாதமில்லைதான், voice on wings ஏற்கனவே சொன்னதுபோல். இதில் வக்காலாத்து வாங்க வேண்டியது ஆணுக்கோ பெண்ணுக்கோ அல்ல; பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, காப்பாற்றப் பட வேண்டியவர்களுக்குத்தான்.

 
At 3:51 PM, Blogger rv said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< Home