Tuesday, October 04, 2005

காதலா.. காதலா!

``தேடி அலைகிறேன் – உன்
தேய்ந்த செருப்பின் சுவடுகளை
பார்த்துக் களிக்கிறேன் – உன்
பாதம் பதிந்த பாதைகளை

எழுதிக் கிழிக்கிறேன் – உன்
நினைவு தொட்ட எண்ணங்களை
பதறித் துடிக்கிறேன் – உன்
பார்வை பட்ட தருணங்களில்

வீம்புக்கு சண்டையிடுவேன்– உன்
விழியசைவில் சரணடைய
காரணமின்றி கடுப்படிப்பேன் – உன்
கரங்களில் என்னை அர்ப்பணிக்க”.

இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்
இளமை எனும் ஊஞ்சலாடியபோது
இன்னும் என்னென்னவோ கிறுக்கியிருக்கிறேன்
இதயத்தில் நீ மட்டுமே இருந்தபோது!
( இப்போதும் இதயத்தில் நீதான்- ஆனால்
இல்லற இடிபாடுகளிடையே நீ!)

5 Comments:

At 8:48 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

நேத்து reader's digestல் ஒரு மேற்கோள் படித்தேன்.
Everybody, no matter how old they are, are around 24,25 in their heart. இள வயது காதலும் நட்பும் மனதளவில் என்றுமே நம்மை இளமையோடு வைத்திருக்கின்றன. அதில் சில சோகங்களும் பல சந்தோஷங்களும் இருக்கும்.

 
At 8:50 AM, Blogger தாணு said...

உண்மை கணேஷ்,
காதலிக்கத் தெரிந்த மனதிற்கு முதுமை இல்லைதான்.

எனக்கு 16 வயதுதான் அந்த வகையில், கொஞ்சம் கூட்டிச் சொல்லிட்டீங்க!!

 
At 9:03 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

//எனக்கு 16 வயதுதான் அந்த வகையில், கொஞ்சம் கூட்டிச் சொல்லிட்டீங்க!!//

அப்படின்னா சீக்கிரம் ஒரு "செந்தூரப்பூவே செந்தூரப்பூவே" எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க

நான் படிக்கிற ஸ்கூலில கணக்கு வாத்தியார் சரியில்லைங்க அதான் அந்த மிஸ்டேக்.

 
At 9:17 AM, Blogger தாணு said...

சரியான பதில்! எனக்கும் மயிலுக்கும் ஒரே வயசுங்க, 16 வயதினிலே வந்தபோது!

 
At 11:20 AM, Blogger தருமி said...

தாணு,
சும்மாவா சொன்னாங்க, yesterdays (yesteryears?) are always sweeter-ன்னு. திரும்பிப் பார்க்கிறதில ஒரு சுகம்தான்.

இன்னொண்ணு, நான் இப்ப 'கருமி' இல்லங்க...அப்டி நினச்சு வீட்டுப் பக்கமே வரலையா?

 

Post a Comment

<< Home