Tuesday, September 27, 2005

சூழ்நிலைக் கைதிகள்!

தேன்துளியின் பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:
(கற்பு எனப்படுவது யாதென்று தெளிவாக விளக்கியிருந்த தோழிக்கு நன்றி. அவரளவு வெளிப்படையாக என்னால் எழுத முடியாதென்பது யோசிக்கத் தூண்டும் உண்மை-)
ஒரு யதார்த்தமான விஷயத்தை வெளிப்படையாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கூட சில தடைக்கற்கள் நாம் வாழும் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கிறது.
உதாரணமாக குஷ்புவின் பேட்டி, சரியான பிரசுரமோ அல்லது திரித்து சொல்லப்பட்டதோ,கடந்த இரண்டுமூணு நாட்களாக படும் அவலம். ஒரு மும்பை பட உலக நடிகையோ, வெளிநாட்டில் settle ஆகிவிட்ட நடிகையோ இப்படி சொல்லியிருந்தால், கருத்து முன்னேற்றம் பெண்களிடம் வந்துவிட்டதாக மேற்கோள் காட்ட பயன்பட்டிருக்கும். தமிழ்நாட்டு மருமகளானதால் அழ வேண்டிய நிலைமை. தனிப்பட்டவர்களின் கருத்தைப் பொறுத்துதான் ஒரு கலாச்சாரமே மாறப் போகிறதென்றால், அப்படி நிலையற்ற கலாச்சாரம் என்ன பயனளிக்கப் போகிறது?
ஒரு பெண்ணை மனரீதியாகக் காயப்படுத்த கற்பு என்ற வார்த்தைதான் தோதாக இருக்கும் என்பதால், கற்பு சம்பந்தப்பட்ட உடை அணிதல் தொடங்கி, ஆண்களுடன் சகஜமாகப் பேசுவது வரை ஏகப்பட்ட வறையறைகளை கருவிலிருந்தே திணித்துத் திணித்து வளர்க்கப்படுகிறார்கள் பெண்கள். அதில் சற்று விலகி நின்று யோசிக்கும் பெண்களுக்கேகூட அடிமனதில் சரியா தவறா என்ற தடுமாற்றம் அவ்வப்போது வந்துவிடுகிறது. வளர்ப்புக்கும் நினைவுகளின் தாக்கங்களுக்கும் இடையே பெண்கள் தடுமாறும் இடைவேளைப் பகுதி இது. இதிலிருந்து எழும்பி வரும் பெண் சமுதாயம் அடுத்த தலைமுறைக்குக் கருத்து சுதந்திரம் ஊட்டி வளர்க்கவேண்டும். அப்போதுதான் இத்தைகைய புகைச்சல்கள் ஓயும்.அதுவரையில் `சமூகம் என்பது நாலு பேர்’தன்மைதான், தனிமனித உணர்வுகள் அல்ல.

10 Comments:

At 4:38 AM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

கற்பு என்பது வெறும் உடல் சம்மந்தப்பட்டது என்று இன்னும் இந்த சமுதாயம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இன்றைய கொந்தளிப்பின் பின்னணி.
எவனொருவன் தவறான எண்ணங்களுடன் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணையோ பார்த்தாலே அவன்/அவள் பாவம் கட்டிக்கொள்கிறான்/ள் என்கிறது பைபிள்.
செக்ஸ் எண்ணங்கள் இன்றைய சூழ்நிலையில் பாவமா இல்லையா என்பது வேறு விஷயம். தினம் ஒரு பெண்ணுடன் மனதளவில் விபசாரத்தில் ஈடுபடும் இந்த ஆண், பெண் சமுதாயம்தான் இன்று குஷ்புவை சாடிக்கொண்டிருக்கிறதென்பதுதான் வேதனையான, வெட்கப்படக்கூடிய விஷயம்.

டி.பி.ஆர்.ஜோசப்
http://ennulagam.blogspot.com

 
At 5:26 AM, Blogger பத்மா அர்விந்த் said...

இந்த நாலு பேரின் வார்த்தைகளுக்காக தன் குழந்தைகள் விருப்பம் கூட பலியாக்கப்படுகிறது. பெற்றவர்களுக்கு அதை பற்றிய தினி கருத்து வேறுபாடு இல்லை என்றாலும் அடுத்தவருக்காக பல காதல்கள் திருமணத்தில் முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 
At 5:33 AM, Blogger Ramya Nageswaran said...

உண்மை தான் தாணு..ஒரு பெண் நேரம் கழித்து வீடு திரும்பினால் அவள் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்று இந்த 'நாலு பேர்' நினைப்பதால் அவள் எப்பொழுது வெளியே செல்ல வேண்டும், எப்பொழுது திரும்ப வேண்டும் போன்ற அடிப்படை முடிவுகளைக் கூட இந்த 'நாலு பேர்' எடுக்கிறார்கள்!

 
At 6:04 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

PESALAAM

 
At 7:26 AM, Blogger தாணு said...

`பேசலாம்' வாசித்ததில்....
கருத்து சுதந்திரம் என்பது ஆண்களுக்குக் கூட பிரச்னையாகிவிடுகிறது சமயங்களில். ஒரு பொதுவான கருத்து பற்றி நமக்குத் தோன்றியதைக் கூறும்போதுகூட அந்தக் கருத்தை நம்மேல் தக்கவைத்துப் பார்ப்பது மனித இயல்பு. அதுதான் `நமது சமூகம்'. ஆண்கள் விமர்சனங்களை அவ்வளவாக பெரிசு படுத்துவதில்லை, பெரிசு பண்ணும்போது மல்லுக்கட்டி சண்டை போட வெண்டும். அப்போதும் அந்த விவாதத்தை முனை மழுங்கச் செய்ய ஒரு பெண்ணைப் பற்றிய கூற்றே தேவைப்படுகிறது. அதைப் புறம்தள்ளி பிரச்னையைப் பேச முன்வரும் கூற்றுக்களே மதிப்பிடத் தகுந்தவை.

 
At 7:32 AM, Blogger தாணு said...

கணேஷ்
போற்றுவார் போற்றலும் புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் குஷ்புவுக்கே!

 
At 7:37 AM, Blogger தாணு said...

tbrjoseph
வருகைக்கு நன்றி
lie detector மாட்டிக்கொண்டுதான் இனிமேல் முதலிரவுகள் நடத்தப்பட வேண்டும்போல் இருக்கிறது. அப்போதானே பெண் கற்புள்ளவளான்னு கண்டுபிடிக்கமுடியும்!!

 
At 7:41 AM, Blogger தாணு said...

ரம்யா,

மீறி சுதந்திரமாகச் செயல்படும் பெண்கள் இவர்கள் பார்வையில் என்னவோ...

தேன் துளி ,
உங்க அளவு வெளிப்படையா பேச முடியாத கணங்கள் எனக்கு அடிக்கடி வருது. சொல்ல நினைப்பதில் பத்தில் ஒரு பங்கு கூட நேரடியாக என்னால் சொல்ல முடிவதில்லை.அந்த ஆதங்கம்தான் இந்த பதிவிலும் இருக்கும். ஆனால் உங்கள் எழுத்தில் நிறைய இடங்கள் என் சிந்தனை போலவே.

 
At 8:48 AM, Blogger தெருத்தொண்டன் said...

//lie detector மாட்டிக்கொண்டுதான் இனிமேல் முதலிரவுகள் நடத்தப்பட வேண்டும்போல் இருக்கிறது//
அப்பவும் பெண்களுக்கு மட்டும் தான் மாட்டப்படும்.

 
At 10:15 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

A request:

about kushboo's interview: could somebody please scan the whole interview and post it?

Thanks.

[am going to post this request in asmany blogs as I can. ie. blogs which have talked about kushboo's interview.

-Mathy

 

Post a Comment

<< Home