Friday, September 30, 2005

இரத்ததான தினம்

இரத்ததான தினம்- அக்டோபர் 01.

``மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல
ரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”


சுழலுவதற்கே என்று உருவாக்கப்பட்டது இரத்தம்
மீண்டும் ஊறப்போவது நிச்சயம். பரிசோதனைக்குழாய்க் குழந்தையை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால்கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும்.

18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்
ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் ( 85%) இருக்கவேண்டும்
இரத்த அழுத்தம் இயல்பாக (மேல் அளவு 100-140 & கீழ் அளவு 60- 90) இருக்க வேண்டும்.
மூன்று மாததிற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.
இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொருடைய உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானத்தின்போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. அதுவும் 24 மணி நேரத்துக்குள்ளாக உடலால் மீண்டும் ஈடுசெய்யப்படும்.

Ø கருவுற்றிருக்கும்போதும்,தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்ததானம் செய்ய வேண்டாம்.
Ø பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவைசிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கலாம்.
Ø மலேரியா சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கவும்.
Ø பால்வினை/ எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்யலாகாது.

அக்டோபர் 01- தேசிய தன்னார்வ இரத்ததான நாள். மேற்கு வங்காளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தன்னார்வலர் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகமெங்கும் இரத்ததான தன்னார்வலர் (voluntary donors) பட்டியல் தயாரிப்பு மும்முரமாக நடைபெற உள்ளது.
உயிர் காக்கும் உன்னதப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இரத்த தானம் செய்யுங்கள். அருகிலுள்ள இரத்த வங்கியை அணுகுங்கள், இரத்தக் கொடையாளராய்ப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேல் விபரங்களுக்கு:
தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம்,
417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8.
தொலைபேசி: 044- 28190467/28190891

நன்றி: ``இமைகள்”(இந்திய மருத்துவக் கழகம் வழங்கும்
மருத்துவ மாத இதழ்)

2 Comments:

At 5:53 AM, Blogger Simulation said...

Pl see my artcile/story on blood donation.

http://www.maraththadi.com/article.asp?id=2447

 
At 9:17 AM, Blogger தாணு said...

உங்கள் பதிவு பார்த்தேன். கதைகள் பகுதியில் வந்திருந்தது, ஆனாலும் உண்மைக் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நானும் A1 –ve தான். ஆனாலும் சரியான க்ரூப்தானா என்று சந்தேகப்பட்டு பிரசவத்துக்கு முன் மூன்று முறை மூன்று பெரிய மருத்துவமனைகளில் மறுபடி மறுபடி பார்த்த அனுபவம் உண்டு. பெண்களுக்கு நெகடிவ் ஆக இருக்கும் பட்சத்தில், அது சம்பந்தமாக பிரசவத்தில் ஏற்படும் பிரச்னை ஒரு கூடுதல் தலைவலி. உங்கள் பதிவு பார்த்ததும் அது பற்றி எழுதத் தோன்றிவிட்டது.

 

Post a Comment

<< Home