Friday, December 23, 2005

நேற்றும் இன்றும்

அன்று........
`இரவின் மடியில்’ கேட்ட பாடல்கள்
இன்னிசையாக இருந்தது;
பகலின் ஒளியில் பார்த்த காட்சிகள்
பட்டாம்பூச்சியாக பறக்க வைத்தது;
நினைத்து மகிழ்ந்த கணங்கள்
நிழற்படம்போல் கண்ணிலேயே தவழ்ந்தது.
படித்தவை சுவைத்தது
பஞ்சணை கொஞ்சியது
பல்வரிசை பளீரிட்டது
பரபரவென்று நேரம் பறந்தது!
இன்று.....
பசித்தவன் தான் பழங்கணக்கு பார்ப்பானா?
பாதிமுதுமை பார்க்க வைக்கிறது என்னையும்!
அட உன்னையும்தான்!
படிக்கட்டு ஏறினால் மூச்சு வாங்கும்
பார்வை மங்கி கண்ணாடி முகத்தில் ஏறும்!
பாழாய்ப்போன மனசு மட்டும்
பள்ளியையும் கல்லூரியையும் பசுமையாய்
புரட்டிப் பார்த்து பெருமூச்சு படர விடும்!
காதலையும் கவிதைகளையும் இளமையையும்
திரும்பிப் பார்த்து திருப்திப் படும்!

என்றும்.......
வாழ்க்கையை
ரசித்தவர்களுக்குத் திருப்திதான்....
தொலைத்தவர்களுக்கோ
எதிலுமே விரக்திதான்!!

8 Comments:

At 10:22 AM, Blogger சத்தியா said...

என்றும்.......
வாழ்க்கையை
ரசித்தவர்களுக்குத் திருப்திதான்....
தொலைத்தவர்களுக்கோ
எதிலுமே விரக்திதான்!!

உண்மையான கவிவரிகள் வாழ்த்துக்கள்.

 
At 2:57 PM, Blogger சிங். செயகுமார். said...

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
ஆண்டாண்டு ஆனாலும் அக மன நினைவுகள் என்றும் இளமையே
எண்ணங்களும் செயல்களும் என்றும் அழகானால்
ஏது முதுமை ?
என்றுமே இளமைதான் நீங்கள்.

 
At 4:04 PM, Blogger பத்மா அர்விந்த் said...

என்ன விரக்தி தாணு? இப்பத்தான் பிறந்த நாள் முடிஞ்சுது அதனாலயா? தனிமடல் பார்த்தீங்களா

 
At 10:11 PM, Blogger தாணு said...

விரக்தி எனக்கில்லை பத்மா! சமீபத்தில் சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது தோன்றியது.

 
At 10:15 PM, Blogger தாணு said...

சத்தியா ,
வருகைக்கு நன்றி. உங்கள் கவிதை ஒன்று வாசித்தேன், நன்றாக இருந்தது!

ஜெயக்குமார்,
நானும் வயசாவதைப் பற்றி வருந்துவதே இல்லை. எல்லோரிடமும், I am 45 years young(old இல்லை)என்றுதான் சொல்வேன்.

 
At 12:02 AM, Blogger ஜென்ராம் said...

ம்..அப்புறம்?

 
At 1:41 AM, Blogger தாணு said...

ராம்கி,

எங்க ஞாபகமெல்லாம் இருக்கா?

 
At 1:49 AM, Blogger My days(Gops) said...

i too wanna type in tamil..cud u guys plz help me hw to make it?

 

Post a Comment

<< Home