கருப்பு ஞாபகங்கள்
கடந்த வருடம் நடந்த
கசப்பான நிகழ்ச்சிகள்..
கணப்பொழுது நினைத்துப் போகும் நம்
கண்களுக்கே கண்ணீர் நிற்கவில்லை
கணப்பொழுதுகூட மறக்காத நெஞ்சங்களுக்கு?
கண்ணீர் வற்றி இதயமே வறண்டிருக்கும்.
செய்தி என்பது
நாலுபுறமிருந்தும் வேண்டியதுதான்
ஆனால் மனிதர்களை
நாராய்க் கிழித்துப்போட்டு வரவேண்டுமா?
ஸ்ரீரங்கமோ கும்பகோணமோ
ஸ்ரீநகரோ நாகையோ
இயற்கை அன்னை மனம்வைத்து
இனியாவது இரக்கம் காட்டட்டும்.
தில்லியோ திருநெல்வேலியோ
பீகாரோ பீளமேடோ
மனித மனங்கள் மனம்திருந்தி
வன்முறையை மறுதலிக்கட்டும்.
கடந்த காலங்களின் கறுப்பு தினங்களுக்கு
அஞ்சலியோடு விடைகொடுத்துவிட்டு
வரப்போகும் புத்தாண்டு
இருண்ட இதயங்களில் ஒளிஏற்றட்டும்.
4 Comments:
கடந்த நிகழ்வுகள்
இடம் தெரியாமல்
தடம் அறியாமல்
உடன் அழிந்து
போவதாய் இருந்தால்
எதுவும் நடக்காத
நடந்தவை மனதை
தொடாத நிகழ்வாக
இருந்திருக்கும்!
நல்லநிகழ்வை விட
மனதை பிழிந்த
கனபொழுதில்
காலன் அழைத்து
சென்ற கல் நெஞ்ச
பயணம் இத்தோடு
முடியட்டும்
புத்தாண்டு பொலிவோடு மலரட்டும்
எழுதட்டும் சரித்திரம்
இனியாவது நல் சரித்திரங்களை!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீங்கள் புரண்ட கடற்கரையின் சோகங்கள் என்பதை உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். காலம் உங்கள் காயங்களை ஆற்றும் ஜெயக்குமார்.
குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல!
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....
பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
Post a Comment
<< Home