Monday, March 16, 2020

CORONA நோயா ? பேயா?


                                              CORONA  நோயா ? பேயா?
“Social Distance” – is the talk of the day.
ஊர் முழுக்க வியாதி பரவுதோ இல்லையோ
உள்ளம் முழுக்க பீதி பரவிடுச்சு.
கிருமித் தொற்றுக்கும் அது சார்ந்த வியாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் அரைகுறை அறிவு ஜீவிகளாலும், அவர்களது சொல் செயல்களாலும் அண்டமே கலங்கிப் போயிருக்கிறது. அதை அணைப்பதற்கு சிறு முயற்சியேனும் எடுக்காமல் எரியிற தீயில் எண்ணெய் வார்ப்பவர்களே அதிகம்.

எதிர்பாராமல் ஏற்பட்ட நிகழ்வுதான், என்றாலும் மனித குலத்தையே பூண்டறுத்துவிடுமா?
எங்கிருந்து புறப்பட்டதோ அந்த சீனாவில் அதன் வீரியம் குறைய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுது மற்ற நாடுகளிலும் குறைய ஆரம்பித்துவிடும். நம்ம ஊரில் ஏற்கனவே இதுபோல் ஏகப்பட்ட கிருமித்தொற்று நோய்களால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பெயருடன் வரும். நமது அன்றாட வாழ்க்கையுடன் அவற்றை எதிர் கொண்டே பழகிப் போனோம். ஆனால் அமெரிக்காவிலும் , ஐரோப்பியாவிலும் இழப்புகள் நேரும்போது மட்டும் உலகமே அழியப் போற மாதிரி கூக்குரல். அமெரிக்காவில் இல்லாத வைத்தியமா, அங்கேயே இத்தனை பேர் இறந்துட்டாங்களேன்னு யோசிக்கக்கூடாது. அந்த வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் எதிர்ப்பு சக்தி ரொம்பக் குறைவு. Healthy diet, Hygenic atmosphere ன்னு programmed life-style  உடன் இருப்பவர்கள். சின்ன பிரச்னை வந்தாலும் போராடக் கூடிய உடல் வலிமையும் எதிர்ப்பு சக்தியும் அவர்களுக்கு இல்லை; நமக்கு இருக்கு.

Work from Home ன்னு வீட்லேயே உட்கார்ந்திருந்தாலும் அத்தியாவசியத் தேவைக்குக் கடைக்குப் போகாமல் இருக்க முடியுமா? தினமும் நடைப் பயிற்சி செல்பவர்கள் வீட்லேயே முடங்கிக் கிடக்க முடியுமா? அன்றாடம் காய்ச்சிகள் வீட்டுக்குள்ளேயே பதுங்கினால் பசியிலேயே போய்ச்சேர்ந்திட மாட்டாங்களா? எத்தனை நாட்களுக்கு வீட்டுச் “சிறை” என்ற வரைமுறை இருக்குதா?
பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்தவர்கள் மருத்துவமனைக்கும், காவல் துறைக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குவார்களா ? ஆயிரெத்தெட்டு கேள்விகள் மனதுக்குள்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிறிய அளவில்கூட கிருமித் தொற்றால் வியாதிகள் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இப்போதைய நிலைமையையும் சரிவர உணர்ந்து கொண்டு கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்க வேண்டும்.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களை சென்றடையவே இல்லை; பயமுறுத்தும் காலர் ட்யூன்களும்; வியதி முற்றி இறந்தவர்களின் சதவீதங்களுமே மிகைப் படுத்திக் காட்டப் படுகின்றன. வியாதியிலிருந்து நலம் பெற்று அன்றாட அலுவல்களில் ஈடு பட்டவர்கள் பற்றி பேச்சே இல்லை. வியாதி வந்தவங்க எல்லோருமே செத்துப்போன மாதிரி ஒப்பாரி வைச்சு எல்லோருடைய மனத் திடத்தை உடைக்கும் வகையிலேயே பிரச்சாரங்கள் வருகின்றன.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் என்ன? ஒரே குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி தனிமைப்படுத்தி வைத்தியம் செய்ய வேண்டும்? கிருமித் தொற்றே ஏற்பட்டாலும் எல்லோருக்கும் நோயாக மாறுவதில்லை போன்றவற்றை சொல்லித்தர மீடியாவுக்கு மனமில்லை. TRB rating  உயர்த்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையே பேசுகின்றன.

சரியான உணவு பழக்கங்கள், நேரத்துக்கு தூக்கம்; சரியான உடற்பயிற்சி; தேவையற்ற பழக்கங்களை (மது, சிகரெட்) தவிர்த்தல் ; நோய் சம்பந்தப்பட்ட மாறுபாடுகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல்; அவசியமில்லாத கூட்டங்களைத் தவிர்ப்பது; தேவையர்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது போன்றவற்றை நீங்களும் மேற்கொண்டு , உடனிருப்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வழி நடத்தினாலே பீதி நோய் பாதி நோய் ஆகிவிடும். மேலும் நமது நாட்டின் சிதோஷ்ண நிலை காரணமாக கிருமித் தொற்று ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைவாக இருக்கலாம் என நம்பப் படுகிறது.

கைகழுவுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்று . ஆனால் அதன் நன்மை உயிர் காக்கக் கூடியது. Hand Sanitizer போட்டுத்தான் கை கழுவ வேண்டும் என்பதில்லை. நாம் உபயோகிக்கும் சோப்பு உபயோகித்து நன்றாக கை கழுவினாலே கிருமி பரவுவதைத் தடுக்கலாம். நாம் இருமினால் எதிரில் இருப்பவனுக்கு பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து கை, துண்டு, கைக்குட்டை எதையாவது வைத்து வாயை மூடி இருமவேண்டும் என்பதை அருகில் இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வரும் முன் காப்போம்;  
வந்துவிட்டாலும் (நோயை) எதிர்ப்போம்;


0 Comments:

Post a Comment

<< Home