Tuesday, June 20, 2006

வாலிபமே வா! வா!!

வளர் சிதை மாற்றம்

பன்னிரண்டு வயது வரை
குட்டைப்பாவாடை ரெட்டைஜடை என்று
பட்டாம் பூச்சியாய்ப் பாடித் திரிந்தேன்

பார்த்ததெல்லாம் ஆசைப்பட்டேன்
பிடித்ததெல்லாம் பற்றிக் கொண்டேன்
கிடைக்காத போது அடம் பிடித்தேன்

தோழனோ தோழியோ பேதமின்றி சுற்றினேன்
தோலுக்கு வெளியேயும் பேதம் அறியேன்
தோழமை ஒன்றே சுகம் என்றிருந்தேன்

பதின்மூன்று வயது வந்தேன்
பார்வைகளின் பேதம் கண்டேன்
பட்டும்படாத உறவுகள் அறிந்தேன்

குட்டைப் பாவாடை கணுக்கால் இறங்கியது
மார்புக் கவசமாய் முந்தானை மூடியது
ரெட்டை ஜடை ஒருமைக்குத் தாவியது

பள்ளித் தோழர்கள் பாவிகளாக்கப் பட்டனர்
பள்ளி செல்லும் பாதை பரிசீலிக்கப்பட்டது
பள்ளி செல்வதே கேள்விக்குரியானது!

குதித்து விளையாடுவது தடுக்கப்பட்டது
குழுவினருடன் அரட்டை அஸ்தமனமானது
குனிந்து நடக்கக் குட்டு வைக்கப் பட்டது.

வயதுக்கு வரும் பருவம் என்றழைத்து
சிறு மலரின் சிறகுகளைப் பிய்த்துவிட்டு
பூ மலரும் நாளுக்கான முன்னேற்பாடாம்?!!!

நண்பர்களைப் பார்த்தும் வந்ததடி நாணம்
எதனாலோ இந்த இம்சைகள், அறியோம்
எதிரில் பார்த்தும் விலகிப் போனோம்

அப்பா பக்கத்தில் படுத்துக் கதை பேசத் தடை
அண்ணா தம்பிகளைத் தொட்டுப் பேசத் தடை
அடுத்த வீட்டு ஆண்களையோ பார்க்கவே தடை!

அடக்குமுறைகளும் எதிர்ப்பு இயக்கங்களும்
அடுக்களை தொடங்கி தெருப்படி வரை தொடர்ந்தது
அம்மா பிள்ளை சண்டைகள் தினமும் ஆர்ப்பரித்தன

அப்பாடி!

ஒருவழியாய்ப் பதினெட்டில் நுழைந்தேன்!
பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் பருவம்
பழமையிலிருந்து மாறத் துடிக்கும் மனம்.
பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சித்தனம்

பதின்ம வயதுகளின் தயக்கம் நீக்கி
பத்தாம் பசலித்தனங்களிலிருந்து விடுபட்டு
இரண்டும் கெட்டான்தனத்திலிருந்து
இனி பெறப் போவது சுதந்திரம்!


BYE BYE ADOLOSCENCE!!
வாலிபமே வா வா!!

8 Comments:

At 8:59 AM, Blogger நாகை சிவா said...

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

 
At 9:08 AM, Blogger தாணு said...

நன்றி சிவா!
முதல் வாழ்த்தே `ராஜ' பார்வையுடன் வந்துவிட்டது!!

 
At 11:52 PM, Blogger யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

 
At 1:26 AM, Blogger தாணு said...

பாரதி
தலைப்பு வளர் சிதை மாற்றம் என்பதால் புனைந்து எழுதப்பட்ட கவிதை அது. `பெண் விடுதலை' அல்லது வேறு ஏதாவது தலைப்பாக இருந்தால் வேறு மாதிரி எழுதியிருப்பேன். நதி மூலம் பார்க்கக்கூடாது, நடையும் உவமையும் சரியான்னு பார்க்கணும்!!!
அப்படியே ஒரு எட்டு போய் `தேன்கூடு'தளத்தில் என் கவிதைக்கு ஒரு ஓட்டு போடுங்க, அப்போதானே நான் ஜெயிக்க வாய்ப்பு கிடைக்கும்

 
At 1:28 AM, Blogger தாணு said...

யாத்ரீகன்
ரொம்ப நல்லா இருந்தது உங்க பதிவு. பின்னூட்டம் அங்கேயே தட்டிட்டு வந்திருக்கேன். என் அடுத்த பதிவிற்கு உங்கள் எழுத்து ஒரு தளமாகிவிட்டது, நன்றி

 
At 5:54 AM, Blogger சிங். செயகுமார். said...

கதைன்னு சொல்லிட்டு கவிதையில வந்து முடிஞ்சிடிச்சா? எங்க வீட்டு கதையும் பக்கத்து வீட்டு கதையும் சேர்த்து சொல்லி புட்டீங்க! இது நல்லா இல்ல:)

 
At 9:20 PM, Blogger வெண்ணை(VENNAI) said...

ரொம்ம்ப நல்லா இருக்கு !!!!
வாழ்த்துக்கள்
வெண்ணைய்

 
At 10:52 AM, Blogger shakthi's blog said...

padithen
padhiya vaithen ullukul!

vaanam vasapadum
ungal vaarthigalil

maruthuvam pesi
manidharai irundhom
ini
kavidhai pesi
"kadavular" aavom

nandrigal
natpudan meendum
nandrigal

 

Post a Comment

<< Home