வாரிசு உருவாகிறது
வாரிசுகளை உருவாக்குவது அரசியலிலும், சினிமாவிலும் சர்வ சாதாரணம். அதைத் தமிழ்மணத்தில் உருவாக்கும் முதல் ஆள் நானாக இருப்பேனோ என்ற புளகாங்கிதத்தில் ஏற்பட்டது இந்தப் பதிவு.
சற்று ஓய்வாக இருந்த நேரத்தில் மகளிடம்(பதினொன்றாம் வகுப்பு மாணவி) என் பதிவுகளைக் காண்பித்து பேசிக்கொண்டிருந்த போது மெதுவாகத் தானும் சில கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னாள். ஏற்கனவே எங்கள் get2gether மலருக்கு சில ஆங்கில கவிதைகள் எழுதித் தந்திருந்தாள். தமிழ் கவிதைகளுக்கு ஒரு நோட் போட்டு அப்பப்போ தோணும்போது எழுதியதாகச் சொல்லி சின்ன தொகுப்பு கொடுத்தாள். நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது. ஆங்கில மோகமும் புழக்கமும் அதிகமாக உள்ள சூழலில் தமிழில் கவிதை எழுத விழைந்த என் அன்பு மகளின் தமிழ் ஆர்வத்தைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பதிவு.
அவளுக்கெனவே ஒரு ப்ளாக் தனியாக தொடங்கப்போவதாக அவளிடம் சொல்லியுள்ளேன்(தேர்வு முடிந்த பின்பு) அதன் முன்னோட்டமான இதற்கு உங்களின் ஆதரவைப் பொறுத்து அவள் தமிழ்ப் பயணம் தொடரும்.இனி வருவது அவள் கவிதைகள்!!!!!!
ஏழைப் பெண்
தலைகுனிந்து
நாணத்துடன் நடந்தால் .....வெகுளி
பாரதிகண்ட பெண்ணாக
நேர்ப்பார்வையுடன் நடந்தால்....ஆணவம்
குடும்பத்தைக் காப்பாற்ற
செல்கிறாள் வேலைக்கு;
அவளைக் காப்பாற்ற
யாருண்டு நாளைக்கு!
கனவுகளைச் சுமந்து
மேடை ஏறுகிறாள்..........விவாகம்
வரதட்சணையால் கனவுகள் இழந்து
நீதிமன்றம் செல்கிறாள்.......விவாகரத்து!
இவை சமுதாயத்தின் கொடுமை
இதுவே பெண் அடிமை
துவண்டுவிடாதே பெண்ணே இதைக் கண்டு
உயர்ந்துகாட்டு உன்மேல் நம்பிக்கை கொண்டு!
காளானுக்கே கொடுப்பாய் பூச்செண்டு
ஆளப்பிறந்தவள் பெண்ணென்று!
ஆசை;ஆசை
இமயமலையின் மீது ஏறி நிற்க ஆசை
நிலவின் மீது கூடைப்பந்தாட ஆசை
ஆப்ரிக்க காட்டிற்குள் நுழைய ஆசை
சிங்கத்தின்மீது சவாரி செல்ல ஆசை
வரிக்குதிரையின் வரிகளை எண்ண ஆசை
பாலைவனத்தில் நீச்சல்குளம் கட்ட ஆசை
பூவிற்குள் வண்டாய் நுழைந்து
தேனைத் திருட ஆசை
என் ஆசிரியர்களுக்கும் ஒருநாள்
பாடம் நடத்திட ஆசை
இந்தியத் திருநாட்டின்
இணையற்ற ஜனாதிபதியாக ஆசை
இத்தனை ஆசைகளும் நிறைவேற
இன்பமுடன் நூறாண்டு வாழ ஆசை!!
கல்பனா சாவ்லா
கனவு கண்டாய் அன்று
வானம் எல்லையில்லை என்று
உலக மரபுகளைக் கொன்று
விண்வெளியை வென்று
சாதித்துக் காட்டினாய் நன்று!
கற்பனை மட்டும் போதாது
அது வெற்றியென்று ஆகாது
நல்குரவு என்று பாராது
நன்கு உழைப்பதே தக்கது
இதை உணர்த்தினாய் இப்போது!
விண்கலத்தில் சென்றாய்
எங்களை விட்டுப் பிரிந்தாய்
விண்மீன்களுடன் கலந்தாய்
ஆனாலும்
எங்கள் மனதில் நீங்காது நின்றாய்!!
தோழன்
எனக்கு உன்னை
சிறுவயதிலிருந்தே தெரியும்!
ஆனால்
பார்வையால் மட்டுமே
நமக்குப் பேசத் தெரியும்!
உன் பார்வையால்தான்
நான் உயிர் வாழ்கிறேன்!
இதனால்
ஞாயிறுகூட விடுமுறை எடுக்காமல்
என்னைப் பார்க்கவரும் சூரியனே!
இரவில் மட்டும்
என்னை விட்டு
விலகுவது ஏன்?
மலரே
மலரே! மலரே!
இயற்கையின் குழந்தையே
சிரித்தாய் மலர்ந்தாய்
உலகை அழகாக்கினாய்.
கண்ணதாசன் பாடலைப் போல் அழகு
வானவில்லைப் போல் வண்ணம்
குழந்தையின் பாதத்தைப் போல் மென்மை
இவையே உன் தன்மை!
இப்படி, உன் அழகில்
டைட்டானிக் கப்பல் போல்
மூழ்கியிருக்கும் ரசிகையின் கூந்தலில்
வந்தமர உனக்கு விருப்பமா?
எண்ணங்களும் ஆக்கமும் அவளது தனிச் சொத்து, தட்டச்சு செய்தது மட்டுமே என் பங்கு.
69 Comments:
முதல் வாழ்த்தே என்னுடையதாக இருக்கட்டும்.
`வாழ்த்துக்கள் குட்டிமா'
அத்தை,
அட இங்கயும் வாரிசு அரசியலா??
கவிதல்லாம் நல்லாருக்கு.. (நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். இருந்தாலும்.. ) தோழன் எனக்கு ரொம்ப பிடிச்சது. இவ்ளோ சின்ன வயசில் இவ்ளோ நல்லா எழுதறாங்களே.
புது ப்ளாக் சீக்கிரமே ஆரம்பிக்க வாழ்த்துகள்.
vaazththukkal, vaangka vaangka
Arumaiyana Karpanai Valam, Quodos for finding it early. May god bless her wishes for a beautiful journey. Sridhar
ராமநாதன்,
ரசிக்கிர மனதும் வாழ்த்தும் இதயமும் போதும்! நன்றி
உஷா
என்னாச்சு தமிழுக்கு. ரொம்ப நன்றி. அவள் பள்ளியில் இருந்து வந்த பிறகு உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தையும் காட்ட வேண்டும். ஏற்கனவே உஷா, ராமநாதன், துளசி போன்ற பெயர்களெல்லாம் அவளுக்கு பரிச்சியம்
'தமிழ் மண இளங்கவி' பட்டம் காலி இல்லை (சிங்.செயக்குமார்! நம்மள தனியா கவனிச்சுக்குங்க) என்ற காரணத்தால் ,'தமிழ்மண இளங் கவிதாயிணி' என்று பட்டமளித்து வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஸ்ரீதர்,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
வருக வருக
கவிதைக்காரர் ஒருவர் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியே...
கவிதைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன தாணு. தங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள். கவிதைகள் தெளிவான சிந்தனைகளோடு இருப்பதுடன் மொழி வடிவமும் நன்றாகவே வந்திருக்கிறது. மிகச் சிறப்பான உயரங்களைத் தொடுவார் என்ற நம்பிக்கையை தருகிறது அவரது கவிதைகள்.
கண்ணம்மாவின் வாழ்த்து எங்க சின்னக் கண்ணம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்!
ஜோ
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷின்னு பட்டம் கிடைச்ச மாதிரி இருக்கு
கவிதைகள் பற்றி விரிவான விமர்சனத்தை இரவு பதிவு செய்கிறேன். ஏழைப் பெண் அற்புதமான கவிதை. இந்த சிறுவயதிலேயே இவ்வளவு தெளிவான சிந்தனையும் கூரிய பார்வையும் அவருக்கு வாய்த்திரிக்கிறது. வரிகள் எல்லாம் வீரியத்துடன் இருக்கின்றன.
இதைத்தான் எதிர்பார்க்கிறோம். பெண்கள் பேச வேண்டும், சுயமாக திடமாக.....
எத்தனை ஆழமான வரிகள் இவை -
//இவை சமுதாயத்தின் கொடுமை
இதுவே பெண் அடிமை
துவண்டுவிடாதே பெண்ணே இதைக் கண்டு
உயர்ந்துகாட்டு உன்மேல் நம்பிக்கை கொண்டு!
//
எழுந்து நின்று கை தட்டுகிறேன்.
பாரதியின் கனவுகள் பலிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் அவருக்கு மற்றுமொருமுறை
வாழ்த்துகள்.
புலிக்குட்டிக்கு வாழ்த்துகள்.
கவிதாயினி இளம் டாக்டருக்கு இனிய வாழ்த்துக்கள் .இன்னும் கவிதை படிக்கல.எசபாட்டு பாட என்னுள்ளம் துடிக்கிறது.இந்த குழந்தை எப்படி எடுத்துக்குமோ என்னை நான் அடக்கி வாசிக்க வேண்டுமோ!
வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடுங்க, கவிதைகள் அருமை அதிலும் ஏழைப்பெண் கவிதை மிக அருமை...
நன்றி
பாரதி சொன்னப் புதுமைப் பெண்ணாய்,
சிறுமைகண்டு பொங்கி, பெருமைக்குத் தலைவணங்கி,
தேமதுரத் தமிழோசை மறவாது செயலாற்றி,
திக்கெங்கும்
பரவட்டும் அச்சிறுப்பெண்ணின் ஆற்றல்
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூற மறந்துவிட்டேன். மேலே நான் இட்டப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
கவிதை எளுதர பார்ட்டி எல்லாம் ஓரங்கட்டேய். நமக்கும் புரியர மாதிரி எளுதற ஆளு வந்தாச்சி.
தாயி, நீ வாம்மா. நல்லா இரு, என்ன.
தாணு
நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு
மகளுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் சொல்லுங்க
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
///கற்பனை மட்டும் போதாது
அது வெற்றியென்று ஆகாது
நல்குரவு என்று பாராது
நன்கு உழைப்பதே தக்கது
///
நல்ல சிந்தனை வளம்
சிறப்பான எதிர்காலம் இருக்கு
ஜோ
எப்ப பட்டமெல்லாம் குடுக்க ஆரம்பிச்சீங்க
காப்பிரைட் பிரச்சனை இருக்காதே
நிறைய எழுதவும், கூடவே நிறைய படிக்கவும் ஊக்குவியுங்கள். அப்படியாக தமிழார்வம் கொண்டவர்கள்தான் இன்று இங்கு எழுதுகிறவர்கள் இல்லையா? வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்..
படிப்புடன் தொடரட்டும் பாக்களும்..
வாழ்த்துகள் !!!
முத்துக்குமரன்,
நன்றி. இதுபோன்ற சீரிய விமர்சனங்கள் அவளை மேலும் ஊக்குவிக்கும்
பரஞ்சோதி,
மிக்க நன்றி.
ஜெய்க்குமார்,
சந்தோஷமாக எசப்பாட்டு பாடலாம். அவள் எதிர்நோக்கும்தைரியம் உடையவள்தான். ஆனால் பதில் சில காலம் கழித்துதான் கிடைக்கும், தேர்வு நேரமென்பதால்!
குழலி,
வாழ்த்துக்களுக்கு நன்றி. என் நட்சத்திர வாரத்தின்போது காணாமல் போய்விட்டீர்கள்
நன்றி டோண்டு சார்.
இலவசக் கொத்தனார்(என்னங்க பெயர் இது, இலவசமா வீடு கட்டித் தருவீங்களா)
எழுத்து நடை நன்றாக இருக்கிறதுதானே!
மதுமிதா
இவ்வளவு அருமையாக எழுதுவாளென்று எனக்கே இப்போதுதான் தெரிந்தது. போன வருடம் வரை ஆங்கிலக் கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தாள்.
தங்கமணி,
நன்றி. அவளை நிறைய படிக்கத் தூண்டுகிறேன். ஹேரிபாட்டரை விட `பொன்னியின் செல்வன்’ அவளுக்குப் பிடிக்கிறது. `கிரெளஞ்சவதம்’ எனக்கு முன்பு அவள்தான் படித்தாள். இப்போதுதான் ஜெயகாந்தனும், பாலகுமாரனும் அறிமுகம் செய்துள்ளேன். அவளது வயதில் எனக்குப் புரிந்ததைவிட நன்கு புரிந்துகொள்வதாகவே படுகிறது.
ராம்கி,
நம் தமிழ் சாரின் அருகாமை இருந்தால் இன்னும் அற்புதமாக எழுதுவாள் , இல்லையா? அவளது தற்போதைய தமிழ் ஆசிரியரும் அவளது தமிழ் ஆர்வத்துக்குக் காரணமென்று சொல்லலாம்.
கல்வெட்டு,
நன்றி. உங்கள் அனைவரின் விமர்சனங்களுக்கும் விடுமுறையில் பதில் எழுதச் சொல்கிறேன்
அம்மா 8அடி என்றால் குட்டி 32 அடி.
வரும்காலத்தில் சகலகலாவல்லியாவாள்
என நம்பும் அன்பு அங்கிள்
சித்தன்
இப்போவே இந்தப் போடு போடுது, வளர வளர `பாயும் புலி' ஆகிடப்போகுது!
பதினாறு அடி பாயும் குட்டி(மா)வுக்கு வாழ்த்துக்கள். வளரணும்...நிறைய வளரணும்...
கண்டேன் கவிதை!
களிப்புற்றேன் கான மயில் போல!
கழுதை வயாசாகியும்
கண்ணதாசன் கவிதை
கொஞ்சம்தான் கொறித்திருக்கிறேன்!
குழந்தை நீயும் கொஞ்சம் அதிகம் தான்!
"காளானுக்கே கொடுப்பாய் பூச்செண்டு
ஆளப்பிறந்தவள் பெண்ணென்று!"
என்னவொரு சிந்தனை
எனக்கும் ஆசிரியை நீ
ஆசைகள் அனைத்தும் நிறைவேற
என் ஆசீர்வாதங்கள்
வின்வெளியில் கப்பல் கட்டி
கண்துயில் கொண்டு
விண்மீனில் வெண்மீனான
விண்கல நாயகியையும்
உன் வளைகரம் வாசித்ததே!
ஞாயிறும் ஞாயிறு திங்கள்
நடந்து வந்தாலும்
நடு இரவில் காணவில்லையா?
மலர் கூந்தலுக்கு
மணம் சேர்க்க
மலருக்கு வலிக்குமோ?
மலரே உனக்கு
டைட்டானிக் பயணம்
மறுக்காமல் ஒத்துக்கொள்!
கவிதாயினி குழந்தாய்!
தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறு......
பழமொழி பொய்க்க வில்லை
புதுக்கவிதைக்கு
பூமகள் பிறந்து விட்டாள்
கவிகளம் காணும் குழந்தையே
புவியனைத்தும் பேர் சொல்ல
புறப்பட்டு வருவாய்!
மனசார வாழ்த்துகிறேன்!
ரொம்ப சந்தோஷம்.. மகிழ்ச்சி.. வாழ்த்துகள்..
குழந்தையின் சிந்தனையில் நிறைய... நேர்மறை எண்ணங்கள் தெரிகிறது.. அதற்காகவே.. பெரும் பாராட்டுக்கள்.. முன்னேறி வளமுடன் வாழ என் தெய்வங்கள் அருள் புரியட்டும்..
என்றென்றும அன்புடன்,
சீமாச்சு..
//அவளது வயதில் எனக்குப் புரிந்ததைவிட நன்கு புரிந்துகொள்வதாகவே படுகிறது.//
இந்த காலத்து பசங்க, நம்மல விட அதிகம் புரிஞ்சு, ரொம்ப விவரமா இருக்காங்க, வளரும் சுழல்,வேகமா கிடைக்கும் விஞ்ஞான வசதிகள் எல்லாமே அவர்களின் அறிவு திறன் வளர்க்க கிடைப்பதாலேயே தானோ, என்னவோ. என்ன இருந்தாலும் நம் குஞ்சு பொன்குஞ்சு தான் போங்க, தங்கள் மகளுக்கு என் வாழ்த்தை தெரிவியுங்கள்!
உங்கள் மகள் நிறைய எழுதவும், வாசிக்கவும், வலைப்பதியவும் வாழ்த்துக்கள் உரிதாகட்டும்!
பாரதி
ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே விமர்சனம் நன்றாக உள்ளது. இவை அனைத்துமே அவள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோணிய போது எழுதியது. படிப்பின் இடியே அதற்கென்று நேரம் செலவழிக்க வழியே இல்லை.
தருமி சாருக்கு நன்றி!
ஜெயக்குமார்,
உங்கள் கவிதை வரிகளை print-out எடுக்கிறேன், அவளுக்கு வாசிக்கக் கொடுக்க. நன்றாக உள்ளது
சீமாச்சு, உங்கள் வருகை என் வாரிசின் பொருட்டு என்றாலும், மிக்க நன்றி
உதய குமார்,
அந்த புரிதல் அதிகமாக இருப்பதாலேயே பல விஷயங்கள் பற்றியும் எழுதுகிறாள். அந்த வயதில் எனக்குக் காதல் கவிதைகள் மட்டுமே எழுத வந்தது!!
டி சே
உங்களுக்குப் போட்டியாக எழுத வருவாள் போலிருக்கிறது
வாழ்த்துகள். வாழ்த்துகள். வாழ்த்துகள். நீடு வாழ்க. நிலைத்து வாழ்க.
kuttimmaku indha athaiyin vazhi mozhithal.aangilap pulamaiyai vida thamizhilil paakkalai paada azhaikkum anbu athai logu.
indha samudaya sindhanai menmelum vlara vazhthukkal.
தாணு, தமிழில் எழுதுவதற்கு என் வாழ்த்துகள். நிறைய வாசிக்கச் சொல்லுங்கள்.
நன்றி ராகவன்.
லோகா,
ஒருவழியாக என் பெண்ணுக்கு வாழ்த்து சொல்லவாவது வந்தாயே! தமிழ்மண ஜோதியில் ஐக்கியமாக என்ன தயக்கம்?
நிர்மலா,
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்தான் வாசிக்கிறாள். விடுமுறையில் கொஞ்சம் கனமான எழுத்துக்களைப் பரிச்சயம் செய்யலாம் என்றிருக்கிறேன்
ஓ! இன்னிக்குத்தான் இந்த இடுகையைப்பார்க்கிறேன்! :(
என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள் தாணு. மேலே பலர் சொல்லியிருப்பதைத்தான் நானும் சொல்லி வைக்கிறேன். நிறைய வாசிக்க வழி செய்துகொடுங்கள். தமிழ், ஆங்கிலம் எல்லாமே.
-மதி
நன்றாகத்தான் இருக்கிறது குட்டி தாணுவின் படைப்புகளும்.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. இதில் வியப்பொன்றும் இல்லையே!
வாழ்த்துக்கள்.
நன்றி மதி
சிபி
நன்றி!
என்னுடைய முந்தைய பின்னூட்டம் காணவில்லையே ! வளரும் பயிர் முளையிலே தெரிகிறது. வாழ்த்துக்கள்!
தாணு அக்கா! நான் ரொம்ப லேட்டு
:-)). சூப்பர் கவிதைகள். ஜூனியர் தாணு கலக்கல்.
ரொம்ப தான் யோசிக்கிறாங்க..பதினொன்றாவதிலேயே வரதட்சினை, ஏழை என்று யோசிக்கும் அளவுக்கு நல்ல எண்ணங்கள் இருப்பதை காண முடிகிறது...'ஆசை' கவிதை..இன்னொரு சின்ன சின்ன..ம்ம்ம்ம்..பெரிய பெரிய ஆசை :-)).
சூரியனை நண்பனாக பார்க்கும் பார்வை புதிது :-).
நன்றாக ஊக்கம் கொடுங்கள். என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் :-)
அன்புடன்,
சிவா
முதல்க்கவிதையே முத்தாய் இருக்கிறது வாழ்த்துக்கள். தாணுவின் வாரிசு என்றால் சும்மாவா என்ன.? தொடர்ந்து எழுத ஊக்குவியுங்கள்.
//என் ஆசிரியர்களுக்கும் ஒருநாள்
பாடம் நடத்திட ஆசை
இந்தியத் திருநாட்டின்
இணையற்ற ஜனாதிபதியாக ஆசை
இத்தனை ஆசைகளும் நிறைவேற
இன்பமுடன் நூறாண்டு வாழ ஆசை!!//
ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
சிவா
வேலைப் பளுவால் உடனே பதில் தர முடியவில்லை. நன்றி.
கயல்விழி
பராட்டுதல்கள் அனைத்தையும் இப்போதைக்கு வாய்வழிச் செய்தியாகவே சொல்லியுள்ளேன். தேர்வு முடிந்ததும் கண்களால் காணச் செய்கிறேன். நன்றி
வாழ்த்துக்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை பார்க்க இயலவில்லை (worm alert) மீண்டும் அனுப்பவும்.
இன்றுதான் இப்பதிவு பார்த்தேன்.
மகளுக்கு வாழ்த்துக்கள்.
யாராவது தங்கள் வாழ்க்கைத் துணையை வலைப்பதிவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்களா என்று அறிய ஆவல்.
ஒருவர் மனையாளின் ஓவியங்களை ஒருமுறை அறிமுகப்படுத்தியதோடு சரி.
நாங்கள் தொடக்குவதற்கிடையில் யாராவது செய்வார்களா என்று பார்ப்போம்;-)
இப்போது தான் இப்பதிவைப் பார்க்கிறேன். ஒரு கவிமலர் பூத்திருப்பதில் மகிழ்ச்சி.
பெற்றோர் தரும் ஊக்கம் தனி பலம். அவ்வகையில் ஆசிர்வதிக்கப்பட்ட கவியுலகின் புதிய தாரகைக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
தேன் துளி
உங்கள் பதிவுகளைப் படித்தேன். போட்டோ விரைவில் அனுப்புகிறேன். இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டாள்
வசந்தன் ,
துணையை யாரும் அறிமுகப் படுத்திய மாதிரி தெரியலை. சகோதர சகோதரிகள் இருப்பது தெரிகிறது
வருக இப்னு!
தவறாக நினைக்கவில்லையென்றால் உங்கள் பெயருக்குரிய அர்த்தம் தெரிந்து கொள்ள ஆவல்.
மிக அருமை. வாழ்த்துக்கள்.
இப்பொழுதுதான் பார்த்தேன், நன்றாக உள்ளன. புதிய வலைப்பதிவு விரைவில் மலர வாழ்த்துகள்!
தாணு அத்தை,
Many more happy returns of HAPPY BIRTHDAY for your daughter
Post a Comment
<< Home