Saturday, April 08, 2006

மகள் வாழ்த்துடன் திருமணநாள்

இன்று( ஏப்ரல் 8 ), எங்கள் திருமண நாளுக்கு வந்த வாழ்த்துக்களிலேயே அருமையான அன்பான என் பெண்ணின் வாழ்த்தைப் பறைசாற்றி பீற்றிக் கொள்ளவேண்டுமென்ற பேராவலில், ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று தட்டச்சு செய்துவிட்டேன்.

Dear Mummy& Daddy,

This is not an ordinary wish; neither is it for two ordinary people. This is a special wish for two special people.

``HAPPY WEDDING DAY’’

Some say marriages are held in heaven. But when your marriage was held in Madras, it was transformed into Heaven.

Woman has a man in it,
Female has a male in it,
Even she has a he in it.
So a man cannot be without a woman and a woman is indispensable without a man. That was how you two had been since April 8 th 1988.

``ஆதார ஸ்ருதி எங்கள் அன்னை என்றால்
அதற்கேற்ற ஸ்வரம் எங்கள் தந்தை’’
இவ்வாறு இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்.


காலையிலிருந்தே வாழ்த்துக்கள் தொலைபேசியிலும், நேரிலும் வந்த வண்ணமே இருந்தாலும் கூட என் மகள் பல் கூட விளக்காமல் கையில் வாழ்த்தட்டை(அவளே வண்ணக் காகிதங்களும் வெட்டி ஒட்டப்பட்ட படங்களும் கொண்டு உருவாக்கியது) தந்து கன்னத்தில் கொடுத்த அன்பு முத்தம் கல்யாண நாளை கனம் பண்ணிவிட்டது. தமிழ் மேற்கோள் ஏதோ ஒரு பாடலில் வரும் வரிகளாம், பொருத்தமாகத் தேர்வு செய்து போட்டிருக்கிறாள். `சினிமாக் கிறுக்கர்கள் சபை’யில் அவளையும் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறேன். மனம் மகிழ வைத்த மலர்களை, என் மக்கட் செல்வங்களை நீரில் நனைய வைக்க `கொடிவேரி அணை’ கூட்டிச் செல்வதாக வாக்களித்துள்ளேன். (சின்னத்தம்பி’ படத்தில் வருமே அந்த அணைதான்)போயிட்டு வந்து `படம்’ காட்டறேன்.

51 Comments:

At 2:04 AM, Blogger ஜோ/Joe said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

 
At 2:45 AM, Blogger முத்துகுமரன் said...

இனிய மண நாள் வாழ்த்துகள்...

உங்கள் செல்லத்திற்கும் வாழ்த்துகள்.. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டிருக்கிறார்..

 
At 3:41 AM, Blogger சிங். செயகுமார். said...

எட்டில் கல்யாணம்
பதினெட்டில் வாழ்த்து
பதிவொன்றில் நான் கண்டேன்
வாழ்த்த வரிகள் தெரியவில்லை
வரிகள் கடன் வாங்கினேன்
வள்ளல் வைரமுத்துவிடம்
"பூக்களுக்குள்ளே தேன் உள்ளவரை காதலும் வாழ்க!
பூமிக்கு மேலே வான் உள்ளவரை காதலர் வாழ்க!"

தேர்வும் முடிஞ்சாச்சு
களம் இறக்குவதாக
காதில் விழுந்தது
காணவில்லை கவிதாயினி
எல்லாம் வாய் வார்த்தைதானோ
புரியாத மொழியில் கவிதை
செரிக்கவில்லை எனக்கு
செந்தமிழில்
சொந்த குரல் எப்போ?

 
At 3:41 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நாங்களும் வாழ்த்துகள் சொல்லிடறோம் டாக்டர்.

 
At 3:42 AM, Blogger மணியன் said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

 
At 3:47 AM, Blogger தருமி said...

தாணு-எழில் தம்பதியருக்கு
எங்கள் குடும்பத்தினர் அனைவரின்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 
At 4:04 AM, Blogger ILA (a) இளா said...

வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு. ரொம்ப நாள் பதிவு பக்கமாவே உங்களை பார்க்க முடியலையே, ஏதாச்சும் விஷேசம்னாதான் வருவீங்களா? உங்க பொண்ணோட வாழ்த்தின முறை பிடிச்சு இருக்குங்க.

 
At 4:08 AM, Blogger கைப்புள்ள said...

உளங்கனிந்த திருமண நாள் வாழ்த்துகள் மேடம். உங்கள் மகள் எழுதிய அந்த தமிழ்ப் பாடலின் படம் ஒரு நாள் ஒரு கனவு.

 
At 5:21 AM, Blogger பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள் தாணு

 
At 6:53 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Happy Anniversary Mrs & Mr. Thanu!

Convey my regards to ur wonderful daughter.

-Mathy

 
At 7:56 AM, Blogger சிவா said...

தாணு அக்கா! உங்கள் சந்தோசத்தை என்னால் உணர முடிகிறது. ரொம்ப அன்பான சுட்டிப் பெண் போல. என் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :-) (அனைக்கு எல்லாம் கூட்டிப்போக சொல்ல மாட்டேன் :-)))

 
At 10:23 AM, Blogger லதா said...

வாழ்த்துகள் அத்தை, மாமா இருவருக்கும்

 
At 11:02 AM, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

தாணு, உங்கள் இருவருக்கும் இனிய மண நாள் வாழ்த்துக்கள். உங்களின் மகளுடைய வாழ்த்து அருமையாக இருக்கிறது. கொடிவேரியில் கொண்டாடி வாருங்கள்.

 
At 11:50 AM, Blogger erode soms said...

ஆயிரம் வாழ்த்துவந்தாலும் நமதுசொந்தங்களின் முத்ததிற்கு ஈடாகுமா!
அவள் எழுத்தை அப்படியே ஸ்கேன் ஆக்கி பதித்திருந்தால் இன்னும் சிறப்பு.
மகள் மாமகளாவாள்!வாழ்த்துக்கள்!

 
At 1:43 PM, Blogger வெளிகண்ட நாதர் said...

தாணு, திருமண நாள் வாழ்த்துக்கள்!

 
At 5:08 PM, Blogger Karthik Jayanth said...

வாழ்த்துகள் டாக்டர்

 
At 12:37 AM, Blogger பரஞ்சோதி said...

வாழ்த்துகள் அக்கா,

வாழ்த்துகள் பிந்தி சொல்லியமைக்கு மன்னிக்கவும்.

நேற்றே வந்திருந்தா கறி சோறு கிடைச்சிருக்கும் தானே.:)

 
At 1:39 AM, Blogger தாணு said...

மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தூவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி!!!!

 
At 1:42 AM, Blogger தாணு said...

நன்றி ஜோ!

முத்துக்குமார்,
இப்போ உள்ள சேன்னை நல்லா இல்லையாம், அதனால்தான் madras என்ற பழைய பெயரிலேயே சொல்லியிருக்கிறாள்.

 
At 2:11 AM, Blogger தாணு said...

செயகுமார்
பெயருக்குத்தான் பரீட்சை முடிந்திருக்கிறது. +2 வகுப்புகள் நாலு நாள் லீவ் முடிந்ததும் ஆரம்பம். பாடத்திட்டம் பார்த்தாலே எரிச்சல்தான் வருகிறது

 
At 2:17 AM, Blogger தாணு said...

மணியன், இலவசக்கொத்தனார், தேன்துளி, வெளிகண்டநாதர், கார்த்திக் அனைவருக்கும் நன்றி.

 
At 2:19 AM, Blogger தாணு said...

தருமி
உங்க பின்னூட்ட வாழ்த்து பார்க்கும் முன்பே உங்கள் செல்போன் அழைப்பில் வாழ்த்து பெற்றுவிட்டேன். மீண்டும் நன்றி

 
At 2:21 AM, Blogger தாணு said...

இளா
பிள்ளைங்க ரெண்டுபேருக்கும் தேர்வு சமயமாக இருந்ததால், கம்ப்யூட்டர் முன்னால் உட்காரவே முடியவில்லை. இனிமேல் அவங்க ப்ரீ ஆகிறாங்களோ இல்லையோ, எனக்கு பொழுது கிடைத்துவிட்டது.

 
At 2:22 AM, Blogger தாணு said...

கைப்புள்ள
நன்றி. கொஞ்ச நேரம் முன்னாடிதான் என் பொண்ணும் அது என்ன பாடல்னு சொல்லிகிட்டு இருந்தாள்

 
At 2:24 AM, Blogger தாணு said...

பாரதி
தாம்பத்யத்தின் அர்த்தம் புரிந்த அழகான வரிகள். சிவில் எஞ்சினியருக்கு கட்டிடம் கட்டுவதில்தான் தேர்ச்சி அதிகம் என்றிருந்தேன், பாட்டு கட்டுவதிலும் சூப்பர்தான் போலிருக்கு.

 
At 2:25 AM, Blogger தாணு said...

மதி,
ரொம்ப நாளாச்சு உங்களை ப்ளாக்கில் பார்த்து!!நன்றி

 
At 2:26 AM, Blogger தாணு said...

சிவா
ஊருக்கு வந்ததும் ஈரோடுக்கு ஒரு விசிட் அடிங்க. கொடிவேரி எட்டிப் பார்த்தால் தெரியும் தூரத்தில்தான் இருக்கிறது, கூட்டிப் போக நான் ரெடி!

 
At 2:28 AM, Blogger தாணு said...

லதா
அத்தை மாமாவுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தானா? கவிதை, வாழ்த்துப் பா எதுவும் கிடையாதா?

 
At 2:30 AM, Blogger தாணு said...

செல்வராஜ்
கொடிவேரியில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இரூட்டும் வரை தண்ணீரிலிருந்து எழும்பவே மனமில்லை. அடுத்த பதிவு கொடிவேரிதான்!!
மண்வெட்டி பிடிக்க ஆரம்பிச்சாச்சா?

 
At 2:31 AM, Blogger தாணு said...

சித்தன்
ஸ்கேன் பண்ணி போடலாமா என்றுதான் நினைத்தேன். ஆனால் எழுத்து தெளிவாக வருமான்னு சந்தேகமா இருந்தது. அவள் எழுத்தே அச்சுக் கோர்த்த மாதிரிதானே இருக்கும்.

 
At 2:32 AM, Blogger தாணு said...

பரஞ்சோதி
நேற்றே வந்திருந்தால், கொடிவேரி மீன் ப்ரை கிடைச்சிருக்கும்.

 
At 2:40 AM, Blogger துளசி கோபால் said...

தாணு,

இந்தாங்க புடியுங்க வாழ்த்து(க்)களை!
இன்று போல் என்றும் வாழ்க.
நல்லா சந்தோஷமா இருங்கப்பா.
நல்லா இருங்க.

 
At 3:03 AM, Blogger பரஞ்சோதி said...

தாணு அக்கா,

அப்படியா, பரவாயில்லை :(

ஆகஸ்டில் ஊருக்கு வரும் போது சாப்பிட்டா ஆச்சுது :).

 
At 4:20 AM, Blogger rv said...

அத்தை,
இனிய மணநாள் வாழ்த்துகள்.

 
At 6:49 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

என் இனிய திருமண வாழ்த்துக்கள் தாணு

எப்போதும் உங்கள் குடும்பத்தில் இறைவன் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருவானாக

 
At 6:12 PM, Blogger ஜென்ராம் said...

மிகவும் காலதாமதமான எங்கள் வாழ்த்துக்கள்.
(பதிவைப் பார் என்று சொன்ன பிறகும் கூட உறைக்கவில்லை அன்று ஏப்ரல் 8 என்று. இதற்கு மன்னிக்கவும் செய்வீர்களாக!)

 
At 9:33 PM, Blogger Ganesh Gopalasubramanian said...

belated wishes

 
At 9:53 PM, Blogger நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் தாணு! தாமதமாக வந்துவிட்டேன். மன்னிக்கவும்.

 
At 2:14 AM, Blogger தாணு said...

நன்றி துளசி

ஊர் சுற்றிவிட்டு வந்த ஜோரில் நன்றி சொல்லவே ரெண்டு நாளாயிடுச்சு.

 
At 2:16 AM, Blogger தாணு said...

பரஞ்சோதி
ஊருக்கு வரும்போது உங்க கதைத் தொகுப்பை மொத்தமாகக் கொண்டு வாங்க. என் பையன் அதெல்லாம் படிக்கும் வயசில்தான் இருக்கிறான்.

 
At 2:17 AM, Blogger தாணு said...

ராமநாதன்
நன்றி. ரஷ்யாவில் மெடிசின் படிப்பது பற்றி சில விபரங்கள் வேண்டும், மெயில் அனுப்பவா?

 
At 2:17 AM, Blogger தாணு said...

நன்றி ஞானியார்

 
At 2:19 AM, Blogger தாணு said...

ராம்கி
அன்றே பார்க்கச் சொன்ன காரணம் ஜென்னிக்கு அந்த நாள் கதைகள் நினைவூட்டப்படும் என்ற காரணத்தால்தான். இல்லாட்டி ராம்கியின் `சுறுசுறுப்பு' பற்றி எனக்குத் தெரியாதா!

 
At 2:20 AM, Blogger தாணு said...

கணேஷ்
தாமதமாயினும் வாழ்த்தியதற்கு நன்றியே!

 
At 2:20 AM, Blogger தாணு said...

சிபி
வருத்தப்பட்டாதோர் சங்கத்தில் இருந்து கொண்டு வருத்தம் தெரிவிக்கலாமா?

 
At 8:49 AM, Blogger செல்வநாயகி said...

ரண்டு மூணு நாள் கழிச்சு இப்பத்தான் பார்க்கிறேன் இப்பதிவை. தாமதமானால் என்ன? மனம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு. உங்களை ஆனந்த மழையில் நனையவிட்டிருக்கிறார் மகள். ஈரோட்டிற்கருகிலா கொடிவேரி இருக்கிறது? எந்த இடம்?

 
At 9:59 AM, Blogger மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் தாணு

குழந்தைகளின் வாழ்த்தென்றால் இனியவைதான்

செப்டம்பர் மாதம் இங்கேயும் குழந்தைங்க அசத்திட்டாங்க

தாமதமா சொல்றேன்
அடுத்த வருட திருமணநாளுக்கு முதலில் நான் வாழ்த்து சொன்னதா நினைச்சுக்குங்க தாணு

 
At 10:23 AM, Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்ங்க தாணு.

பெண்ணின் வாழ்த்தைப் படித்து நெகிழ்ந்து போனேன். எந்த வகுப்பு படிக்கிறார்கள்?

இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். தொடர்ந்து படிப்பேன்.

நன்றி
கமல்

 
At 9:40 AM, Blogger தாணு said...

செல்வநாயகி
மிகத் தாமதமாகவே பதில் தருகிறேன். ஆனாலும் உங்கள் கேள்வி விழுந்த கணத்திலேதான் `கொடிவேரி ' பதிவு போட்டேன். அடுத்த முறை ஊர் வரும்போது பார்த்துவிடுங்கள்

 
At 9:41 AM, Blogger தாணு said...

மதுமிதா
நாம எல்லோருமே தாமதமாகத்தான் பந்தியில் உட்காருகிறோம். என் பதிலைப் பாருங்கள் எத்தனை நாள் கழித்து வருது?

 
At 6:26 AM, Blogger பாலராஜன்கீதா said...

அன்புள்ள அத்தை மாமா தங்களுக்கு எங்களின் மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
:-)))

 

Post a Comment

<< Home