Saturday, February 25, 2006

நால்வர் அணியால் நானும் சங்கிலியில்

`சங்கிலித் தொடர்’ன்னு ஏதோ இருக்குதேன்னு ஜோ பதிவிலிருந்து பின்னோக்கி போய்ப் பார்க்கும்போது, திடீர்னு இளா பதிவில் என்னையும் `சங்கிலி’யிட்டிருப்பது தெரிந்தது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் `நதி மூலம்’ பார்க்கலாம்னு துருவினாலும் அதுக்கு மேல் போக முடியலை. அதுக்குள் தருமி வேறு உன் பாடு- எப்படியோ தொடர்ந்து கொள் என்று சாபமிட்டிருந்தார்(சும்மா கேலிதான்);சிங். ஜெயக்குமார் இந்த அக்காவை அன்புடன் அழைத்திருந்தார்;சமீபத்தில் பாரதியின் நாலு நல்ல வார்த்தையாகிப் போனேன் -இனியும் சங்கிலியைப் பின்னாமல் விட்டால், அதை உடைத்த பாவியாகிவிடுவேனோ என்ற அவசரத்தில் இந்தப் பதிவு!!

மேற்கொண்ட நான்கு வேலைகள்:
சென்னை, ராமாராவ் பாலி க்ளினிக்கில் தகுதி பெற்ற மருத்துவராய் முதல் பணி ஆரம்பம்
அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சொந்த க்ளினிக் வைத்து சுதந்திரமாகத் திரிந்த அடுத்த கட்டம்.
அரசுப் பணியில் ஊர் ஊராகச் சுற்றியது படு கஷ்டம்.
ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கியிருப்பது இன்றைய கால கட்டம்.

மிகவும் பிடித்த 4 படங்கள்:
1. தம்பிக்கு எந்த ஊரு
2. மெளனராகம்
3. சிந்து பைரவி
4. கோகுலத்தில் சீதை
(நாற்பது படங்களுக்கு மேல் இருக்கும் லிஸ்ட்டில், முன்னுரிமை தரப்பட்டவை)

வசித்த நான்கு இடங்கள்:
1. ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம்-பிறந்த ஊர்
2. ஹைகிரவுண்ட்,திருநெல்வேலி-படித்த ஊர்(கல்லூரி)
3. நுங்கம்பாக்கம், சென்னை-திருமணத்துக்கு முன்
4. ஈரோடு - திருமணத்துக்குப் பின்.
(நாடோடியாய்த் திரிந்தவர்களிடம் நாலு ஊர் மட்டும் சொல்லச் சொல்வது கொடுமை. ரொம்ப கஷ்டப்பட்டு தேர்வு செய்த லிஸ்ட்)

பிடித்த 4 டிவி நிகழ்ச்சிகள்:
1. K Tvயில் இரவு 8 மணி சினிமா,பிடித்த படம் வரும்போது.
2. நேரம் குறிப்பிடமுடியாத இடைவேளைகளில் சன் ந்யூஸ்
3. சேனல் பாகுபாடில்லாமல் பாடல் வரும் அலைவரிசை
4. ??????
(ரொம்ப கஷ்டமான கேள்வி)

சுற்றுலா சென்ற நாலு இடங்கள்:
1 .டார்ஜிலிங் & காங்டாக்
2.டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர்
3. அவுரங்காபாத்- அஜந்தா , எல்லோரா
4. ஹைதராபாத்
(மிக சமீபமாகச் சென்ற இடங்கள்)

பிடித்த 4 உணவுகள்:
புளிக்குழம்பு, தேங்காய்த் துவையல்
அவியல், இடி சாம்பார்(சாம்பார் பொடி உரலில் இடிப்பார்கள்)
கூட்டாஞ்சோறு, கூழ் வத்தல்
இட்லி, லைன் சட்னி( கொஞ்சூண்டு தேங்காயில் பாத்திரம் நிறைய எங்க அம்மா வைக்கும் சட்னி)
(இது எல்லாமே எனக்கு விடுமுறையில்தான் கிடைக்கும், அப்போதானே ஊரிலிருந்து அக்கா மதினி எல்லாரும் வருவாங்க, செய்து தருவாங்க!!)

நான் இருந்திருக்க வேண்டிய நாலு இடங்கள்:

1. அரும்பாக்கம் க்ளினிக் தொடர்ந்திருந்தால் சென்னை வாசி
2. அரசுப் பணி நீடித்திருந்தால் எந்த ஊரோ?
3. DGO படிக்கப் போகாமலிருந்தால் தூத்துக்குடி
4. கிடைத்த MD படித்திருந்தால் கோயம்புத்தூர்

தினமும் உலா வரும் 4 இடங்கள்:
1. தமிழ்மணம்
2. ஜி மெயில்
3. யாஹூ
4. ஹாட் மெயில்

பிடித்த 4 பாடல்கள்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வா வெண்ணிலா உன்னைத்தானே
நிலாவே வா வா(மெளன ராகம்)
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல்

நன்றி சொல்ல வேண்டிய நால்வர்
இளா
தருமி
ஜெயக்குமார்
பாரதி

இந்த சங்கிலித் தொடர் எதனால் ஆரம்பித்தார்களோ, ஆனால் எழுத வேண்டுமென்ற கடமை உணர்வைத் தூண்டிவிடுகிறது.

என் அன்புச் சங்கிலியின் பிடியில் வரவேண்டிய நால்வர்

சிரில் அலெக்ஸ்

சித்தன்

ஸ்டேஷன்பென்ச் ராம்கி

செல்வராஜ்



9 Comments:

At 9:02 AM, Blogger நாமக்கல் சிபி said...

ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய்யகம்!

நீங்களும் மாட்டிகினீங்களா? :)

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

 
At 9:09 AM, Blogger சிங். செயகுமார். said...

பொருக்கி எடுத்து எழுதினாலும் எதையோ மிஸ் பன்னுனதா தோனுதுல்ல! இன்னும் நிறைய எதிர் பார்த்தேன்.

 
At 9:39 AM, Blogger G.Ragavan said...

தாணு தானும் பட்டியல் போட்டு விட்டார். ம்ம்ம்...நல்ல பட்டியல்தான்.

நீங்களும் காங்டாக் போயிருக்கீங்களா....நானும் போயிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும். சங்மோ லேக் போய்ப் பாத்தீங்களா!

அவுரங்காபாத்...நல்ல இடங்க....பக்கத்துல அகமத்நகர் போயிருக்கீங்களா? பக்கத்துலதான். அருமையான பாவ் பஜ்ஜி கிடைக்கும்.

 
At 11:26 PM, Blogger rnatesan said...

சன் நியூஸைப் பிடிக்கும் என்கிறீர்களே,காலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை அதே செய்தியைதான் சொல்றாங்க!!
நன்று!!

 
At 12:39 AM, Blogger தாணு said...

வருகைக்கு நன்றி நடேசன். அடுத்த நாள் வரை அதே செய்தி வருவதால்தான் பிடிக்கிறது. கரண்ட் ந்யூஸ் மட்டும் வரும் சேனல்கள் பார்க்கப் பொழுதிருப்பதில்லை

 
At 12:40 AM, Blogger தாணு said...

சிபி
ரொம்ப தாமதம்தான் பதில் எழுத, அதற்குள் உங்கள் வா.ச. பற்றி படித்துவிட்டேன்

 
At 12:41 AM, Blogger தாணு said...

ஜெயக்குமார்
வேலைப் பளுதான். இன்னும் உங்கள் தோழிக்கு மெயில் அனுப்பக்கூட பொழுதில்லை. அதற்குள் உங்கள் விமர்சனம் மட்டும் படித்தேன். சீக்கிரம் முழுதும் படிக்கிறேன்

 
At 12:43 AM, Blogger தாணு said...

ராகவன்,
அப்போதான் அஜந்தா எல்லோரா எல்லாம் பார்த்தேன். வருடம் ஒருதரம் ஆல் இந்தியா கான்பரன்ஸ் வரும்போது ஊரும் சேர்த்து சுத்திடறதுதான். அடுத்த வருடம் கல்கத்தா

 
At 12:44 AM, Blogger தாணு said...

பாரதிக்கு அவியல்தான் பிடிக்கும்னு நினைத்தேன்

 

Post a Comment

<< Home