Saturday, March 11, 2006

வண்ணக் குழப்பம்

ண்க் குழப்பம்
கலர் பார்ப்பதிலிருந்து கலர் கலரா ரசிப்பது வரை வண்ணங்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்ட விஷயம். ஆனால் ஒவ்வொரு வண்ணத்துக்கும் தனிச் சிறப்பு இருப்பதுபோல் இரட்டை அர்த்தங்கள் கொள்ளும்படியாகவும் பயன் படுகின்றன. கீழே சொல்லப்பட்ட வண்ண அடைமொழிகளுக்கு யாராவது உரிய விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும். ( பரிசெல்லாம் கிடையாதுங்க, ஏழைப்பட்ட ஜனங்க நாங்க)

மஞ்சள் பத்திரிகை
நீலப் படம்
பச்சை வசனங்கள்
சிகப்பு விளக்கு

இன்னும் எத்தனையோ இருக்கலாம், எனக்குத் தெரிந்த நாலு!
(ரொம்ப நாளா பதிவு போட நேரமே கிடைக்கலியா, அதுதான் இந்த இடைச் சொறுகல்)

26 Comments:

At 8:39 AM, Blogger சிங். செயகுமார். said...

ரொம்ப நாளா அக்காவோட பதிவுகள காணலையேன்னு நெனச்சேன். சமீபத்தில் நீல கலர்ல ஒருத்தரு டிரஸ் போட்டுகிட்டு ஒரு படத்துல வந்தாரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அ ஆ மத்ததெல்லாம் ஒன்னும் புரியலைங்க!

 
At 10:49 AM, Blogger தருமி said...

வெள்ளை மனசு...

 
At 9:22 PM, Blogger சம்மட்டி said...

கறுப்பு பணம், வெட்ட (வெள்ளை) வெளிச்சம் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
சம்மட்டி

 
At 12:52 AM, Blogger தாணு said...

ஜெயக்குமார்
உண்மையாகவே நேரமில்லைதான். தமிழ்மணத் தம்பிகள் மறந்திடக்கூடாதேன்னுதான் சின்ன பதிவு. ஒரு ஒப்பேத்தல்தான்

 
At 12:53 AM, Blogger தாணு said...

பாரதி,
தூங்குற மாதிரி நடிக்கக் கூடாது. நான் கேட்ட விளக்கம் அந்த வண்ணங்களில் உள்ள ரெட்டை அர்த்தம் எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ள!

 
At 12:55 AM, Blogger தாணு said...

தருமி,
வெள்ளை முடி உள்ளவங்களுக்கு எப்பவுமே வெள்ளை மனசுதான். அவங்க குழந்தைகளைப் போலத்தானே!

 
At 12:56 AM, Blogger தாணு said...

சம்மட்டி
வருகைக்கு நன்றி. அந்த கறுப்புப் பணம்கிறது எதனால் வந்ததுன்னுதான் என் கேள்வி.

 
At 1:56 AM, Blogger கைப்புள்ள said...

//மஞ்சள் பத்திரிகை
நீலப் படம்
பச்சை வசனங்கள்
சிகப்பு விளக்கு//

இதெல்லாம் என்னங்க? மார்கெட்ல புதுசா வந்திருக்க ஐட்டமா? நான் இப்ப தான் முதல் தடவையாக் கேள்வி படறேன். இதுல இரட்டை அர்த்தம்னு வேற சொல்றீங்க?...சிவ...சிவ

 
At 4:37 AM, Blogger Ram.K said...

என்னோட தமிழ் வலைத்தளம் பேரு தெரியாதா உங்களுக்கு ?

:))

 
At 6:52 AM, Blogger தாணு said...

பாரதி
அறிவு ஜீவின்னு நினைச்சவங்க எல்லாம் ஆளை விடுங்கன்னு ஓடினால், எனக்கு எப்படித்தான் பதில் கிடைப்பது?

 
At 6:54 AM, Blogger தாணு said...

கைப்புள்ள
இவ்வளவு சின்னக் குழந்தையா நீங்க? உண்மையாவே இடுப்பில வைச்சுக்கிற கைப்புள்ளன்னுதான் உங்க பேருக்கு அர்த்தமா?
பதில் கிடைச்சதும் சொல்லிடறேன் குழந்தாய்!!

 
At 6:55 AM, Blogger தாணு said...

பச்சோந்தி
உண்மையாகவே எனக்கு இந்தப் பெயர் உங்கள் பதிவினுடையதுன்னு மனசிலாகலை. உங்களைக் கேட்காமல் பேர் உபயோகித்ததுக்கு வருந்துகிறேன். பதில் கிடைத்ததும் உங்களுக்கு ராயல்டியாக சமர்ப்பித்து விடுகிறேன்

 
At 9:06 AM, Blogger Ram.K said...

என்னங்க இது வருத்தம்ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.

வண்ணக்குழப்பம் பச்சோந்திக்கு மட்டும் சொந்தமா என்ன?

:)))

 
At 9:45 AM, Blogger ஜென்ராம் said...

மண்டபத்துல சிவபெருமான் வந்து என்றைக்கு விடை சொல்லித் தருகிறாரோ அன்று தருமி வந்து உங்கள் ஐயம் போக்குவார்:-))

 
At 4:07 AM, Blogger மதுமிதா said...

சிவப்பு விளக்கு:படம் இங்கே பாருங்க

http://madhumithaa.blogspot.com/2006/03/blog-post_08.html

 
At 7:18 AM, Blogger Udhayakumar said...

1. "அந்த" மாதிரி தமிழ் புத்தகமெல்லாம் லேசாக பழுப்பேறிய(ஆல்மோஸ்ட் மஞ்சள்) மிகவும் விலை குறந்த தாளில் அடித்திருப்பார்கள்.
2. "அந்த" மாதிரி படத்தின் பேக்ரவுண்ட் இருட்டும் இல்லாமல் முழு வெளிச்சமும் இல்லாமல் இருக்கும்.
இந்த ரெண்டும் இப்போ மலையேறி போயிடுச்சு. எல்லா கலர்லையும் இருக்குன்னு நினைக்கறேன்.

3. ஆடு மாடு எல்லாம் பச்சையா வேக வைக்காமே சாப்பிடுமே, நீங்க சாப்பிட முடியாதில்ல. அதுதான்
4. வீட்டுக்கு முன்னாடி சிகப்பு விளக்கு எரிஞ்சுதுன்னா அங்க விளக்கை அணைக்க ஆள் ரெடியா இருக்காங்கன்னு அர்த்தம்.

எல்லாம் கேள்வி ஞானம்தான். தப்பா நினைச்சுக்காதீங்க.

 
At 12:13 AM, Blogger தாணு said...

ராம்கிக்கே என் பதிவு பார்க்க நேரமிருக்கும்போது, சிவ பெருமான் வர மாட்டாரா என்ன?

 
At 12:14 AM, Blogger தாணு said...

மதுமிதா
சிக்னல் வெளிச்சத்தில் சிறார்களின் அவலம் பார்த்தேன்

 
At 12:15 AM, Blogger தாணு said...

உதயகுமார்
நீங்களும் பாரதியும் மட்டும்தான் கொஞ்சம் பதில் சொல்லியிருக்கீங்க. இதுவே சரியானதா என்று தெரியலை

 
At 2:40 AM, Anonymous Anonymous said...

1) மஞ்சள் பத்திரிக்கை: மஞ்சளை மங்களகரமான நிறமாக தமிழர்கள் பார்ப்பது வழக்கம் ஆகவே மங்களகரமான விடயங்களிற்காய் அடிக்கும் பத்திரிக்கை மஞ்சள் பத்திரிகை. துக்கத்திற்கு கறுப்புத்தானே பாவிப்பார்கள்.

4) சிகப்பு விளக்கு : சிவப்பு அபாயத்தின் சின்னம். சிவப்பு விளக்கு பகுதிக்குச்செல்வது அபாயகரமானது என்றதை சிம்போலிக்கா சொல்றாங்க.

கயல்விழி

 
At 11:54 PM, Blogger erode soms said...

மஞ்சள்--அந்திமாலை மஞ்சள்கயிற்றால் ஊஞ்சலாடும் சூரியன்.
நீலம்--நீ...லவானம் மெளனநிலா.
பச்சை-- பச்சைப்பாசிகளும் குளத்தில் துள்ளும்மீன்களும்.
சிவப்பு--பச்சைக்கிளியின் மிளகாய் இதழ்கள்.
இப்படி தோன்றினால் தவறில்லையே!

 
At 5:31 AM, Blogger Radha N said...

மஞ்சள்-- அவ்வப்போது மாறி மாறி வரும் தமிழின் 'மிக'சிறந்த வார இதழ்கள்.
நீலப்படம்-- புதுமுக கதாநாயகிகளின் 'அஞ்சல் தலை'
பச்சை வசனங்கள்--தமிழ 'காக்கும்' கவிஞர்களின் ஊற்று.
சிகப்பு விளக்கு--தூரத்து பச்சை!

 
At 9:42 AM, Blogger தாணு said...

கயல் உங்கள் லாஜிக் கொஞ்சம் நல்லாயிருக்கு

 
At 9:42 AM, Blogger தாணு said...

சித்தன் போக்கு சிவன் போக்குதானோ?

 
At 9:44 AM, Blogger தாணு said...

நாகராஜன்
வருகைக்கு நன்றி. வர்ணங்களுக்கும் நன்றி

 
At 6:40 AM, Blogger மணியன் said...

மஞ்சள், நீலம் மற்றும் சிகப்பு ஆங்கிலத்தின் வாடை. அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
பச்சை வசனம் - உண்மையில் பச்சயான - இலைமறைவு காய்மறைவாக இல்லாத

 

Post a Comment

<< Home