நினைவலைகளின் பயணம்
நினைவலைகளின் பயணம்.
தினம் தினம் இணையத்தில்
வலம் வரும்போது நிறைய நண்பர்களோட பகிர்வுகள் என் மனதை வருடிச் சென்றது. சில நிகழ்வுகள்
நான் வாழ்ந்ததாகவே தோன்றியது. அதையெல்லாம் வாசிக்க வாசிக்க, என்னுள் பொங்கிப் பிரவகிக்கும்
எண்ணங்களை எழுத்துருவாக்கணும்கிற ஆசை அதிகமாகிடுச்சு. விபரம் தெரிய ஆரம்பித்த நாட்கள்
முதல், கண்டு, பழகி அனுபவித்த , கடந்த காலம்
பெரிய தங்கச்சுரங்கமாகவே தெரிகிறது. அசை போட்டு எழுத ஆரம்பித்தால் ஆயுசு போதாதென்றே
தோன்றுகிறது. ஆனாலும் முயற்சிக்கலாமென்று முடிவெடுத்துவிட்டேன்.
தொடர்பில்லாத சம்பவங்கள்
வரலாம்; பருவங்கள் மாறி பரவலாம் ; நினைவில் நின்றவைகளை எழுதப் போகிறேன். அதில் நீங்களும்
என்னுடன் பயணிப்பீர்கள்.
என்றென்றும் அன்புடன்
தாணு.
2 Comments:
வாழ்த்துகள்....
வாழ்த்துகள்....
Post a Comment
<< Home