Thursday, October 20, 2005

காசியின் பச்சை விளக்கு!!

பச்சை விளக்கு எரியுமென்றார்
புரட்டி புரட்டிப் பார்க்கிறேன்
எந்தப் பக்கம் எரியுமென்று
எவரிடம் கேட்பது?

காசியிடமே கேட்டுவிடுவோம்
கவிதை மூலமாகவே!
கத்திரிக்கோல் நமக்கில்லையெனில்
கண்டிப்பாக தமிழ்மணம் தாய் வீடுதான்

புலம்பக் கிடைத்த இடம் இது
புலமை சோதிக்கும் மேடையும் இது
கருத்துக்களைக் கருத்தரிக்கும்
சொப்பன உலகமும் இது

இடையிடையே ஏஞ்சல்களையும்
இருட்டியபின் சில சாத்தன்களையும்
இடற நேர்ந்தாலும் இனிப்பான
இணையக் கடலல்லவா இது!

தமிழ்மணத்தின் முத்துக்களை
சில சொத்தை முத்துக்களானாலும்
பொத்திப் பாதுகாக்க வேண்டுமென்று
பொறுப்பாக வேண்டிக் கொள்கிறேன்

12 Comments:

At 9:15 AM, Blogger ramachandranusha(உஷா) said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:06 AM, Blogger தாணு said...

உஷா
ஏன் பின்னூட்டத்தை அழிச்சிட்டீங்க

 
At 10:09 AM, Blogger தாணு said...

பொரிகடலை என்பது கவிதையின் தரமா கேள்வியின் தரமான்னு தெளிவு பண்ணினால் நல்லா இருக்கும். எப்பிடியோ எனக்கு பாஸ் மார்க் வந்தாச்சு. கடலையை மணக்க சாப்பிடுவீங்களோ ஊற வைத்து சாப்பிடுவீங்களோ உங்கள் பல்லின் நேர்த்தியைப் பொறுத்தது மகரே! நல்ல பல் டாக்டர் முகவரி தேவையெனில் துளசியைக் கேட்கவும்!!

 
At 11:23 AM, Blogger ramachandranusha(உஷா) said...

டெஸ்ட் செஞ்சிப் பார்த்தேன். தாணு இது கவிதையே தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. படிக்கட்டாய் இருக்கு இல்லே :-))
ஆமாம், உங்கள் ஜீ மெயில் முகவரியில் போன வாரம் ஒரு தனிமடல் அனுப்பியிருந்தேனே பார்த்தீங்களா இல்லையா?

 
At 12:19 PM, Blogger துளசி கோபால் said...

எல்லாத்துக்கும் 'துளசி'யை இழுத்துருங்க.

சரி சரி. சொத்துபத்து எல்லாத்தையும் வித்துட்டு கொஞ்சமாத் துணிமணிகளை எடுத்துக்கிட்டு இங்கெ வந்து சேருங்க.
பல்டாக்டர்கிட்டே கொண்டுபோறேன்:-)))))))))))))

மறக்காம எதாவது நல்ல கிஃப்ட் வாங்கிக்கிட்டு வாங்க.( எனக்குத்தான்!)

 
At 7:53 PM, Blogger ஜென்ராம் said...

துளசி கோபால் எங்கெங்கு பின்னூட்டம் இடுகிறார் என்பதற்கு மட்டும் அவர் ஒரு தனிப்பதிவு தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அவற்றைப் படித்து விட்டு வாய்விட்டு சிரித்து விட்டால் எங்களுக்கு மனநல மருத்துவரிடம் போகும் செலவு மிச்சமாகும்.

 
At 8:27 PM, Blogger தாணு said...

உஷா
தனி மடல் அனுப்பியுள்ளேன்.

 
At 8:29 PM, Blogger தாணு said...

`துளசி'யை மெல்லாமல் மணம் வீசுவது எங்ஙனம்?
ஊழலே இல்லாத ஊரில் கூட அன்பளிப்பு கலாசாரத்தைத் துவக்கியாச்சா?

 
At 8:31 PM, Blogger தாணு said...

அப்பாடி,
ராம்கிக்கு ஒரு வழியா என் ப்ளாக் பக்கம் எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சிட்டுது.
காண்டேகர் கலெக்ஷன் வாங்கி வைத்தாயிற்றா?

 
At 9:10 PM, Blogger துளசி கோபால் said...

//ஊழலே இல்லாத ஊரில் கூட அன்பளிப்பு கலாசாரத்தைத் துவக்கியாச்சா? //

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு...

இவ்வளவுதூரம் வர்றவுங்க வெறுங்கை வீசிக்கிட்டா வருவீங்க?

 
At 9:30 PM, Blogger தாணு said...

துளசி
சத்தமா சொல்லாதீங்க. தமிழர்களின் குணம் தமிழ்மணத்தில் நாறும் நாள் இது!!

 
At 6:32 PM, Blogger erode soms said...

இலக்கணம் இல்லாதாவை நிலைப்பதில்லை!

 

Post a Comment

<< Home